தீபாவளிக்கு ஊருக்கு போகணுமா? ரயில் முன்பதிவுக்கு இன்றே போங்க..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

05 July06 Train ticket reservation - 2026

தீபாவளிக்கு ஊருக்குச் செல்ல முன்பதிவு இன்று தொடங்குகிறது! இன்று காலை 8 மணியிலிருந்து ரயில்களில் முன்பதிவு செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவோர் இன்று காலை 8 மணிக்கு ரயில்களில் முன் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை செல்வதற்கான ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடங்குகிறது!  தொடர்ந்து அக்.24 25 26 27 28 29 30 என ஆறு நாட்களுக்கு ஊருக்குச் செல்வதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் 6 நாட்களுக்கு பதிவு செய்யலாம்.

deepavali ticket reservation - 2026இவற்றில் அக். 25 26(வெள்ளி, சனி), 28,29 (திங்கள் செவ்வாய்) ஆகிய நாட்களில் செல்வதற்காக, அதிக அளவிலான பயணிகள் ரயில்களில் செல்ல முன்பதிவு செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது! எனவே இந்த நாட்களில் பயணிகள் முன்பதிவு அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது!

தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்குகிறது! எனவே  தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக 120 நாட்களுக்கு முன்பு இன்று டிக்கெட் முன்பதிவு செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.