குடும்பத் தகராறில்… 2 வயது மகனை தூக்கிலிட்டு… தாய் தற்கொலை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்

ariyalur mother suicide - 2026

அரியலூரில் குடும்பத் தகராறில் இரண்டு வயது மகனை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர், புது மார்க்கெட் தெருவைச் சேர்ந்த மனைவியை இழந்த ஜெயக்குமாரும் கணவரை இழந்த ஸ்மிதாவும் முறைப்படி மறுமணம் செய்துகொண்டவர்கள்.

இவர்களுக்கு ரித்தீஷ் என்ற 2 வயது மகன். நேற்று உறவினர் வீட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய இருவருக்குள்ளும் ஏதோ வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஸ்மிதா, சோகமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஸ்மிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து மகனை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.