தமிழகத்தில் ஆக-7ம்தேதி கருணாநிதி நினைவு தினம்; அமைதி பேரணி முக.ஸ்டாலின் அறிவிப்பு…!

Published:

karunanidhi96 - 2026

ஆகஸ்ட் 7-ஆம் தேதி கருணாநிதி நினைவு அமைதிப் பேரணி – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தின் முன்னாள்  முதல்வரும் மறைந்த திமுக தலைவரும் கலைஞர் கருணாநிதியின் முதலாம் நினைவு தினமான ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் கூறியிருப்பது:

karunanidhi statue - 2026

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மறைந்த “கலைஞர் கருணாநிதியின் முதலாம் நினைவு தினம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அரசியல் தலைவா்கள், கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.karunanithi - 2026

அதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் உருவச் சிலையை மேற்கு வங்க முதலமைச்சார் மம்தா பானர்ஜி திறந்து வைத்து பேசுகிறார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

MK Stalin - 2026

அதனைதொடர்ந்து சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சா் மம்தாபானர்ஜி, ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்க உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img