images 2023 03 01T125410.494 - 2026

அண்ணா பல்கலை பெயரில் போலி டாக்டர் பட்டம் – புகார் அளிக்க முடிவு-துணைவேந்தர்..

சென்னை
images 2023 03 01T125410.494 - 2026

இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்ட பலருக்கு அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் புகாரளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளதாக துணை வேந்தர் கூறியுள்ளார்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் புகாரளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகையும், தமிழகஅரசும் அறிவுறுத்தி உள்ளன. இதையடுத்து ஆளுநர் செயலாளர், உயர்கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.