பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: அக்குபஞ்சர் டாக்டர் கைது!

கிரைம் நியூஸ் சென்னை

arrested - 2026

பணிப் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட அக்குபஞ்சர் மருத்துவர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் சபீர் அகமது என்ற மருத்துவர். 48 வயதாகும் இவர் அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவர் தன் வீட்டிலேயே ஒரு பகுதியில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்! சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்!

விசாரணையில் சபீர் அகமது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.