கோவை பயங்கரவாதிகள் தொடர்புள்ளவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வுப் பிரிவினர் சோதனை!

கோவை சற்றுமுன் சென்னை தமிழகம்
nia searches dindivanam - 2026

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் கைது செய்யப்பட்ட இஸ்மாயில் என்பவரின் திண்டிவனம் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கைதான 7 பேரில் 3 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள பைசல், சந்திரன் வீதியில் உள்ள ஆசிக் மற்றும் குனியமுத்தூரில் உள்ள அன்வர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் காலை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.