தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது… பிளாஸ்டிக் தடை! அந்த 14 பொருள்கள்..?

Published:

12 June30 plastic ban - 2026

தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தமிழக முழுவதும் பத்தாயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில், தடையை மீறுவோர் மீது அபராதத்தை தாண்டி வேறு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வெளியிடப் பட்ட அரசாணையின்படி, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி ஆகியவற்றுக்கான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களின் உறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் வாங்கும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் தரப்பட மாட்டாது என்பதால், பொதுமக்களே துணிப்பைகளை கையில் எடுத்து செல்ல வேண்டும்

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து பிளாஸ் டிக் பைகளையும், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், வார்டு அலுவலகங்களில் மாலைக்குள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றை பறிமுதல் செய்ய சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்:

  1. உணவுப் பொருட்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள்,
  2. பிளாஸ்டிக் தெர்மாக்கோல் தட்டுகள்
  3. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள்
  4. பிளாஸ்டிக் குவளைகள்
  5. நீர் நிரப்பப் பயன்படும் பைகள்
  6. நீர் நிரப்பப் பயன்படும் பொட்டலங்கள்
  7. பிளாஸ்டிக் தூக்குப் பைகள்
  8. பிளாஸ்டிக் கொடிகள்
  9. பிளாஸ்டிக் விரிப்புகள்
  10. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள்
  11. பிளாஸ்டிக் தேனீர் குவளைகள்
  12. பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்
  13. பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்
  14. நெய்யாத பிளாஸ்டிக் பைகள்

மாற்றுப் பொருட்கள்:

  1. வாழையிலை
  2. பாக்கு மர இலை
  3. அலுமினியத் தாள்
  4. காகிதச் சுருள்
  5. தாமரை இலை
  6. கண்ணாடி / உலோக குவளைகள்
  7. மூங்கில் / மரப் பொருட்கள்
  8. காகிதக் குழல்கள்
  9. துணி / காகிதம் / சணல் பைகள்
  10. காகிதம் / துணிக் கொடிகள்
  11. பீங்கான் பாத்திரங்கள்
  12. மண் கரண்டிகள்
  13. மண் குவளைகள்
ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Related articles

Recent articles

spot_img