கழுத தேஞ்ச கதையா மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்! இனி வெறும் எஞ்சின் மட்டும் ஓடுமோ?

Published:

railway news - 2026
#image_title

போகிற போக்கைப் பார்த்தால் இந்த செங்கோட்டை – மயிலாடுதுறை செங்கோட்டை ரயிலுக்கு நாளுக்கு நாள் பெட்டிகள் எண்ணிக்கையைக் குறைத்து தற்போது வெறும் பத்து பெட்டிகளுடன் இயங்கும் ரயில் நாளடைவில் வெறும் இன்ஜின் மட்டும் இயங்குமோ என்ற அச்சம் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எப்போது இந்த ரயிலுக்கு விடிவுகாலம் வருமோ என பயணிகள் ஏக்கத்தில் உள்ளனர். 16 பெட்டிகளுடன் விழாக் காலங்களில் கூடுதல் இரண்டு பெட்டிகளும் கொண்டு இயங்கிய மதுரை செங்கோட்டை பயணிகள் ரயில் மற்றும் 16 பெட்டிகளுடன் இயங்கிய திண்டுக்கல் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் இரண்டையும் இணைத்து 2022 அக்டோபர் முதல் வெறும் 12 சில நேரங்களில் 10 பெட்டிகளுடன் மட்டும் இயங்கும் செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் குறைந்தபட்சம் 18 பெட்டிகளாக்கி இரண்டு ரிசர்வேஷன் கோச்சுக்களும் ஏற்படுத்தி தர பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரமுள்ள செங்கோட்டைக்கு 12 பெட்டிகளுடன் இயங்கும் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து 16 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது..ஆனால் விட்ட நாள் முதல் பயணிகளின் குமுறலாக உள்ள செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயிலில் எப்போது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்கப்படும் என தென்காசி கொல்லம் திருவனந்தபுரம் விருதுநகர் மதுரை மாவட்ட பயணிகள் பெரும் ஏக்கத்துடன் உள்ளனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல் மயிலாடுதுறை பயணிகள் ரயிலை இணைத்து 450 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை ரயிலில், 10 பெட்டிகள் மட்டும் உள்ள நிலையில் மக்கள் சிரமப்பட்டு பயணிக்கின்றனர்.

மதுரை- – செங்கோட்டை வழித்தடத்தில் தினமும் 3 நேரம், 16முதல்18 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் இயங்கி வந்தது. இதனால் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயணித்து வந்தனர். மதுரையில் இருந்து மயிலாடுதுறை/ஈரோடுக்கு தினமும் ஒரு ரயில் இயங்கியது.

திண்டுக்கல்லில் இந்த ரயில் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பாதி ஈரோடுக்கும், மற்றொரு பாதி மயிலாடுதுறைக்கும் செல்லும். இந்நிலையில் மயிலாடுதுறை– திண்டுக்கல், மதுரை- – செங்கோட்டை இரு ரயில்களையும் இணைத்து செங்கோட்டை– மயிலாடுதுறை ரயிலாக தற்போது இயங்கி வருகிறது.

16பெட்டிகளுடன் இயங்கிய மதுரை – செங்கோட்டை ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்ட பிறகு 10 பெட்டிகளாக குறைக்கப்பட்டது. இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் உயிரை பணயம் வைத்து படியில் தொங்கிக்கொண்டு பயணித்து வருகின்றனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 18 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரிவருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து 80 கிலோமீட்டர் தூரமுள்ள செங்கோட்டைக்கு 12 பெட்டிகளுடன் இயங்கிய பயணிகள் ரயிலில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் ஏப். 24ல் மதுரையில் நடந்த எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று மறுநாளே கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், செங்கோட்டையில் இருந்து 450 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறைக்கு இயங்கும் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு பதிலாக, இருந்ததையும் குறைத்து இந்த ரயில் இயங்குவதால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் சாதாரண நாட்களில் கூட உட்கார இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இது குறித்து ரயில் பயணிகள் சங்கங்கள், மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

எனவே, திருநெல்வேலி எம்.பி.யைபோல் தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை தொகுதி எம்.பி.க்களும் ரயில்வே உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மக்களுடன் ரயிலில் பயணித்து அவர்களின் சிரமங்களை உணரச் செய்து, கூடுதலாக 6 பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img