கரூர் அருகே பக்தர் வெள்ளத்தில் களைகட்டிய மாரியம்மன் கோவில் திருவிழா!

Published:

lalapettai amman temple - 2026

கரூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.

கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியை அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. பக்தர்கள் தண்ணீர் கொண்டு வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வந்தனர்.

காலை 11:30 மணி அளவில், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உத்ஸவர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் இழுத்தனர். பின், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிந்தலவாடி, லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

Related articles

Recent articles

spot_img