வெள்ளை வேட்டி

வெள்ளச் சட்டை பாருங்கோ – இன்று

கொள்ளக் காரன்

கொண்ட வேடம் தானுங்கோ !

 

கோடி கோடி

கொண்டு போறான் பாருங்கோ – அவன்

ஓடி வந்து

ஓட்டுக் கேப்பான் போடுங்கோ !

 

குடும்ப மாகக்

கூறு போட வாராங்கோ – அந்தக்

கொடுங் கோலன்

குணத்தைக் கொஞ்சம் பாருங்கோ !

 

தானே தமிழின்

தானைத் தலைவன் என்பாங்கோ – நீங்க

தானே எனக்கு

தாயும் தகப்பன் என்பாங்கோ !

  

கள்ளப் பணத்தை

கணக்குப் பார்த்து வைப்பாங்கோ – தங்கள்

பிள்ளை பேரில்

பித்த லாட்டம் செய்வாங்கோ !

 

துட்டு வாங்கி

ஓட்டுப் போட வேணாங்கோ – மனம்

தொட்டு நல்ல

தூய ஆட்சி கேளுங்கோ !

 

உள்ள தெல்லாம்

உரைச்சுப் புட்டேன் கேளுங்கோ – இந்தக்

கள்ள ஒட்டுக்

காரன் கூட்டம் ஓட்டுங்கோ  !

 

– கவிஞர் : மீ.விசுவநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending