இதுதான் தூத்துக்குடி பாஜக., வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜனின் பயோடேடா…!

Published:

tamilisai soundarrajan bjp - 2026

தூத்துக்குடி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் – பயோ-டேட்டா! 

தூத்துக்குடி பா.ஜ.க வேட்பாளராக டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் அறிவிக்கப் பட்டிருக்கிறார். அவர் குறித்த பயோ-டேட்டா இது…

தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்கிறார் தமிழிசை செளந்திரராஜன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க-வின் கொள்கைகளை பா.ஜ.க தொண்டர்களிடமும், தமிழக மக்களிடமும் எடுத்துச் செல்லும் பணியில் இருந்து வருகிறார்..

தொழில் – மருத்துவர் MBBS, DGO
சிறப்பு கல்வி தகுதி – முதுநிலை மகப்பேறு மருத்துவம்
சிறப்பு பயிற்சிகள் – Sonology & Fetal Therapy (கனடா, ஆஸ்திரேலியா, லண்டன்)
பணி அனுபவம் – 7-ஆண்டுகளாக துணை பேராசிரியர், மகப்பேறு மருத்துவத்துறை, ஸ்ரீராமசந்திரா மருத்துவ கல்லூரி சென்னை

அரசியல் பயணம்

மாணவர் தலைவர் – சென்னை மருத்துவமனை கல்லூரி
1999 to 2001 – பா.ஜ.க. தென்சென்னை மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர்
2001 to 2004 – பா.ஜ.க. பொதுச் செயலாளர் (மருத்துவ பிரிவு)
2004 to 2005 – கோட்ட பொறுப்பாளர் (மூன்று மாவட்டம்)
2005 to 2007 – அகில இந்தய சக அமைப்பாளர் (மருத்துவ பிரிவு) மற்றும் மாநில செய்தி தொடர்பாளர்
2007 to 2010 – மாநில பொதுச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் தமிழக பா.ஜ.க
2010 to 2013 – மாநில துணைத் தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் தமிழக பா.ஜ.க
2013 to 2014 – தேசிய. செயலாளர் அகில பாரத பா.ஜ.க. மற்றும் செய்தி தொடர்பாளர்
2014 to ஆகஸ்டு முதல் – மாநிலத் தலைவர் தமிழக பா.ஜ.க

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

சிறப்பு பங்களிப்புகள்

  1. துணைத் தலைவர், தமிழ் இலக்கிய அமைப்பு

  2. மருத்துவதுறையில் இரண்டுநூல்கள் எழுதியுள்ளார்(Guidelines to Sonology)

  3. நமது மரியாதைக்குரிய திரு.நரேந்திர மோடி அவர்களை (Achievement of Modi Ji – தமிழ்)

  4. திரு.நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் தமிழ்மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் இலக்கிய மற்றும் அரசியல் கட்டுரைகள்.

  5. 10 வருடங்களாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளாக மாணவர் மற்றும் மக்களுக்காக மேடைப்பேச்சு பயிற்சியும், திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.

  6. சமூக சேவைகள் – பெண்கள் முன்னேற்றம்.

  7. சிறந்த மொழி பெயர்ப்பாளர் – தேசிய தலைவர்களின் உரையை தமிழில் மொழி பெயர்ப்பவர்.

  8. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் இயக்குநர்.

குறிப்பிடத்தக்க சேவைகள்..

  1. கஜா புயல் பாதிக்கபட்ட மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்குப உதவி செய்தல்.
  2. வாரந்தோறும் பிரதி செவ்வாய்கிழமை மக்கள் குறைதீர் கூடட்ம் நடத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீதான குறைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்படுகின்றன.
  3. பெண் சக்தி இயக்கம் என்ற பெண்களுக்கான சேவை உதவிகள் மற்றும் பல மக்கள் நல சேவைகள்.
ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

சுய விவரம்:

பெயர் – மருத்துவர். தமிழிசை சௌந்திரராஜன்

பிறந்த தேதி – 02.06.1961
கணவர் பெயர் – மருத்துவர். சௌந்திரராஜன் தலைமை துறை சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்
தந்தையின் பெயர் – குமரி அனந்தன் M.A, Ex.MP (கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி &5 Times MLA)
குழந்தைகள் – 1 மகன், 1 மகள் இருவரும் மருத்துவர்கள்
நிரந்தர முகவரி – மருத்துவர் திருமதி தமிழிசை சௌந்திரராஜன்,
மாநில தலைவர் பா.ஜ.க தமிழ்நாடு,
நெ.4/7, லோகையா நாயுடு காலனி, 4வது குறுக்கு தெரு,
சாலிகிராமம், சென்னை – 93

குறிப்பிடத்தக்க விருதுகள் – அமெரிக்காவின் இந்திய அரசியலில் வளர்ந்து நட்சத்திரம் – 2018 என்ற விருது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img