குய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்!

Published:

dead body 1 - 2026

சிலர் இறந்துவிட்டதாக கூறி அடக்கம் செய்ய போகும்போது கண்விழித்த சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. அதுபோன்று பாகிஸ்தானில் சமீபத்தில் இறந்துவிட்டதாக நினைந்து பெண் ஒருவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்தபோது அவர் உயிருடன் எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஷிதா என்ற அந்த பெண் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரஷிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதோடு, அவர் இறப்புக்கான இறப்பு சான்றிதழையும் வழங்கியுள்ளன்னர்.

இதனை அடுத்து ரஷிதாவை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இறுதி சடங்கின் ஒரு பகுதியான உடலை குளிப்பாட்டும் நிகழ்வில் ரஷிதாவின் உடலை உறவினர்கள் குளிப்பாட்ட ஏற்பட்டு செய்துள்ளன்னர்.

அதன்படி, ரஷிதாவின் உடலை குளிப்பாட்டும் போது அவரது கால் மூட்டுகளில் அசைவு இருப்பதை அவரது மருமகள் உணர்ந்துள்ளார்.

அதன் பின்னர் ரஷிதாவை உடனடியாக அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளன்னர், ரஷீதா தற்போது அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

Related articles

Recent articles

spot_img