சபரிமலை: நடைதிறந்து பூஜை! பக்தர்கள் வரவேண்டாம்! தேவஸ்தானம் வேண்டுகோள்!

அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
sabhari malai - 2026

கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில் சபரிமலைக்கு, தடா போட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தங்களால் முயன்ற விழுப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சபரிமலையில் மார்ச் 14 முதல் 18 வரை நடைபெறும் மாத பூஜைகளுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆனால், சபரிமலை கோயிலில் மாத பூஜை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.