மாஸ்க் போடலியா?! ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai mask fine1 - 2026

மதுரையில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கையாக, முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகிறது.

முக கவசம் அணியாத நபர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது

அதில் ஒரு பகுதியாக இன்று திருப்பரங்குன்றம் திருநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாத வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரூபாய் 200 வீதம் அபராதம் ரூபாய் 4200 அபராதமாக வசூலிக்கப்பட்டது .

madurai mask fine - 2026

மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் நம்மிடம் தெரிவிக்கையில்… வரும் வாடிக்கையாளர்கள் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கிருமிநாசினி கடை வாசல் முன் வைக்க வேண்டும் சாலையில் எச்சில் துப்பக் கூடாது எனவும் மீறி தப்பினால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் எனவும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் .

fine for mask6 - 2026

மேலும் வெளியே வரும்போது மக்கள் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் மீறி கவசம் அணியாமல் வந்தால் கட்டாயமாக ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.