நிச்சயித்த தேதியில் திருமணம்! தொற்று வந்த மணமகனை வார்டில் மணமுடித்த மணமகள்! வைரல்!

Published:

corona marriage
corona marriage

கொரோனா வார்டில் வைத்து நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்நிலையில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கைனாகரி கிராமத்தை சேர்ந்த சரத்மோன் என்பவருக்கும் அபிராமி என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க நாள் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு மணமகனுக்கும், அவரது தாய்க்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும் இருவீட்டாரும் குறித்த நேரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

அதனால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை வாங்கி மணமகள் கவச உடை அணிந்து மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணக் காட்சி சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img