கொரோனா நிவாரணம்: 13 வகை மளிகைப் பொருள்கள் வழங்க திட்டம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
ration
ration

தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டமிடப் பட்டிருக்கிறது.

கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 வகை மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடுகு, சீரகம், சோப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன என்றும், ஜூன் 3ஆம் தேதி நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டம் இட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அரசு வழங்கத் திட்டமிட்டுள்ள 13 வகை மளிகைப் பொருள்கள்..

கோதுமை மாவு 1 கிலோ
உப்பு – 1 கிலோ
ரவை – 1 கிலோ
சர்க்கரை – 500 கிராம்
உளுத்தம்பருப்பு – 500 கிராம்
புளி – 250 கிராம்
து. பருப்பு – 250 கிராம்
கடுகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
மஞ்சள்பொடி – 100 கிராம்
மிளகாய்ப்பொடி – 100 கிராம்
குளியல் சோப் 125 கி – 1
சலவை சோப் 250 கி – 1

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.