ஜஸ்ட் ட்ரை முலாம்பழ ஐஸ்க்ரீம்!

Published:

melon ice cream
melon ice cream

முலாம்பழ ஐஸ்க்ரீம்

தேவையானவை:

முலாம்பழ விழுது – 2 கப்
பால் – 250 மில்லி (காய்ச்சி ஆற வைத்தது)
கண்டன்ஸ்டு மில்க் – 200 கிராம்
பால் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – கால் டீஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி சிரப் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

முலாம்பழத்தின் தோல், விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் முலாம்பழ விழுதுடன் பால், கண்டன்ஸ்டு மில்க், பால் பவுடர், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பீட்டரால் அடிக்கவும். பிறகு டப்பாவில் ஊற்றி மூடி ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து மீண்டும் பீட்டரிலோ அல்லது மிக்ஸியிலோ போட்டு அடித்து டப்பாவில் ஊற்றி மூடி 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். நன்றாக செட் ஆனவுடன் மேலே ஸ்ட்ராபெர்ரி சிரப் ஊற்றிப் பரிமாறவும்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

குறிப்பு: இரண்டு முறை ஐஸ்க்ரீமை வெளியே எடுத்து பீட்டரால் அடிப்பதால் ஐஸ்க்ரீம் மிருதுவாகவும், க்ரீமியாகவும் வரும். விரும்பினால் பாதாம், பிஸ்தா பருப்புகளைச் சேர்த்துப் பரிமாறலாம்.

Related articles

Recent articles

spot_img