December 5, 2025, 5:53 PM
27.9 C
Chennai

மனதுக்கும் செயலுக்கும் உறவில்லாமல்… மோடி… மோடி… மோடி!

modi mankibaat - 2025

யுத்த களத்தில் இவர் நுழைந்தபோதே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது பொய்க்கவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற கணமே இவர் பல ஆண்டுகள் பதவியில் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்தது. அது பொய்த்து விடும் போலிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரியாமல் இருக்காது.
இன்னும் 5 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதில் இவர் வெல்வாரா? இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இப்போதைய பெருங்கேள்வி இவரையே மீண்டும் பிரதமர் வேட்பாளராகக் கட்சி நிறுத்துமா என்பதுதான்.

ஏனென்றால் எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை அளிக்கும் காரணம் என்ற நியதியை இவர் நிரூபித்திருக்கிறார். அயல் நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் நம் கஜானாவுக்கு வரும் என்றார், வரவில்லை. பட்டியல் வெளியிடப்பட்டால் அதில் நிச்சயம் இவர் பெயர் இருக்காது. ஆனால் இவர் தன் நண்பர்களைக் காப்பாற்றுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறதே? 

மோடியின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்று நாட்டின் பொருளாதாரம் சீரடையும் என்பது. இவர் காலத்தில் பொருளாதாரம் சீரடைந்ததோ, இல்லையோ, பாழ்படவில்லை. ஆனால் அது மக்களுக்குச் சொல்லப்படவில்லை. வெற்றுப் புள்ளிவிவரங்கள் ஏழைகள், நடுத்தர மக்களின் வயிற்றை நிரப்ப மாட்டா. அவரவருக்குத் தேவை மேம்பட்ட வாழ்க்கை வசதிகள். அதைக் கருத்தில் கொள்ளாமல் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நினைத்த மோடி, தன் அருகிலேயே அனுகூலச் சத்ருக்களை வைத்துக் கொண்டிருக்கிறார்.

குருஷேத்ரத்தில் வெற்றிப் பெற்ற அர்ஜூனன், யுதிஷ்டிரனையும், பீமனையும் ஒதுக்கி வைக்கவில்லை. ஆனால், இவர் அதைச் செய்தார்.

அமெரிக்காவில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டதும், இன்னொரு அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அரவிந்த் சுப்ரமணியன் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் சரியான நடவடிக்கைகளே. தொழில்முறை பொருளாதார நிபுணர்கள் வசம் நாடு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு என்ன நெருக்கடியோ? ரகுராம் ராஜன் விரட்டியடிக்கப்பட்டார். அரவிந்த் சுப்ரமணியன் வெளியேறத் தூண்டப்பட்டார். இதனால் அவர்களுக்கு எந்த நஷ்டமுமில்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரம் மறுபடியும் அரசியலுக்கு அடிமைப்படுகிறது.

அடுத்த தேர்தலுக்குள் அரசியலையும், பொருளாதாரத்தையும் இணங்க வைக்க நேரமில்லை. அரசியலுக்கு ஒத்துப்போக சுதேசப் பொருளாதார நிபுணர்களும் உடன்படவில்லை. அதனால்தான் உர்ஜித் படேலும், சுர்ஜித் பல்லாவும் ராஜினாமா செய்தார்கள். ஆக, பொருளாதாரத்திடம் இருந்து அரசியல் விவாகரத்து பெற்று விட்டது.

சாதாரண மக்களுக்கு என்னச் செய்தோம் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார். ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல், காஸ் விலையேற்றம், ரூபாய் மதிப்பிழப்பு ஆகியவை குதிரை குப்புறத் தள்ளியதுடன் குழியையும் பறித்ததாம் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளி விட்டன.

எளிமைக்கு உதாரணமாக இருந்த இவர் ஒருநாள் அணிந்த விலையுயர்ந்த கோட், அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவை சின்னஞ்சிறு தலைமைச் சறுக்கல்கள். யதேச்சாதிகாரி போல் நடந்து கொண்ட இவரிடம் எதையும் எடுத்துச் சொல்லும் துணிவில்லாதவர்களாக இருந்தார்கள் அருகிலிருந்த ஒரு சில நலம் விரும்பிகள். அவரது மனமும் அவருக்கு தார்க்குச்சி போடவில்லை.

ஐ.மு.கூ. ஆட்சியில் அரசியல்வாதிகள் அதிகமாகச் சாப்பிட்டாலும், தம் சாப்பாட்டுக்குத் தடையில்லை என்று நினைத்திருந்தார்கள் மக்கள். இப்பொழுது வாழ்க்கை வசதிகள் மட்டுப்படுவதாக நினைக்கும் வாக்காளர்கள், மோடியைத்தான் விமர்சிக்கிறார்கள். அதற்கான எச்சரிக்கை மணிதான் ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள். தேர்தல் முடிவுகளை அலசி, வாக்குகளின் புள்ளி விவரங்களை மட்டும் கணக்கிட்டு பாஜக ஆறுதல் கொள்ள முடியாது.

ஏதோ நினைத்தோர் ஏதோ நடந்தது, அது நம் நன்மைக்கல்ல என்று நினைக்கிறார்கள் மக்கள். வந்தார், வென்றார் என்பது சரி, சென்றார் என்றிருக்கக்கூடாதே என்பதே நம் கவலை. தன் மனதுக்கும் செயலுக்கும் உறவில்லாமல் மயங்குகிறார் மோடி.

பின்குறிப்பு: மோடி பற்றிய “மனதுக்கும் செயலுக்கும்“ என்ற இந்தக் கட்டுரையை எழுதியபோது விமர்சனக் கருத்துக்கள் வரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆழ்ந்து படிப்பவர்களுக்கு மோடியை தொடர வேண்டும் என்ற என் உள்மனம் புரிந்திருக்கும். மீண்டும் காங்கிரஸ் வந்தால் இந்தியாவை இத்தாலிக்கு எழுதிக் கொடுத்துவிட வேண்டியதுதான் என்பதும் எனக்குப் புரிகிறது.

ஒருநாளும் நான் காங்கிரஸ்க்கு வாக்களிக்க மாட்டேன். வக்காலத்து வாங்க மாட்டேன். அப்படி இருந்தும் ஏன் இதை எழுதினேன்? சமீபத்திய கர்நாடக, ராஜஸ்தான், சட்டீஸ்கர் தேர்தல் முடிவுகள் என்னை மிகவும் பாதித்துள்ளன. இவற்றை மத்திய அரசுக்கு எதிரான போக்கு என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும் மோடி கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

மோடி தன் மந்திரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஊழல்கள், முறைகேடுகள் இல்லை. ஆனாலும் மக்களிடம் இவர் நமக்கு என்ன செய்தார் என்ற ஏக்கமும், ஏமாற்றமும் தெரியவருகிறது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொழில் முறை பொருளாதார நிபுணர்களுக்கு கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் அமைப்புகளில் இடம் இருந்ததில்லை. ஒப்புக்காக ஒரிருவர் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை. அரசுக்கு உரிய ஆலோசனைகளையும் சொன்னதில்லை.

ஆனால் மோடி தொழில் முறை பொருளாதார நிபுணர்களான ரகுராம் ராஜனையும், அரவிந்த் சுப்ரமணியனையும் நியமித்தார். அது நல்ல முடிவு. ஆனால் அவர்கள் ஏன் தம் பதவிகளில் தொடரவில்லை.

தொழில் முறை பொருளாதரா நிபுணர்களின் முடிவுகளை எந்த அளவுக்கு மோடி ஏற்றார் அல்லது ஏற்கவில்லை என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அரசியலுக்கு இணக்கமான பொருளாதார முடிவுகளை எடுப்பதென்றால் நிர்வாக பொருளாதாரம் பாழ்படும். இப்போது மோடி இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கு இடையே தவிக்கிறார். இன்னும் நான்கைந்து மாதங்களில் அரசியல் காரணங்களுக்கு ஏதேனும் அதிரடி முடிவுகள் எடுத்தால், அவற்றை சரியாக நிறைவேற்ற முடியாது. அப்படிச் செய்யாவிட்டால் மக்களின் ஏமாற்றம் தொடரும்.

ஆதியிலிருந்தே திட்டமிட்டிருக்க வேண்டியதை பாதியிலாவது தொடர்ந்திருக்கலாம். இப்படிப்பட்ட எண்ணங்களே என்னை அந்தக் கட்டுரையை எழுத வைத்தன. மற்றபடி நான் ஒருபோதும் காங்கிரஸை ஆதரிப்பவன் அல்ல. அதில் வாசர்களுக்கு எந்த சந்தேகமும் வர வேண்டாம். ஐந்து வருடங்களுக்கு முன்பு யாருக்காக இந்தியா என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு புத்தகத்தை சோனியா காந்திக்கு சமர்ப்பணம் செய்தேன். அந்த சமர்ப்பணத்தை கிழே அப்படியே தருகிறேன்.

சர்வ வீர்ய, சர்வாக்ரக, சர்வ வியாபியான, இத்தாலிய ஜனன, இந்திய பிரஜாஸ்நான சோனியா காந்திக்கு இந்த நூல் சமர்ப்பணம். இவர் நம் அரசியலில் இல்லாவிட்டால் இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்க மாட்டேன். காங்கிரஸ்காரர்களும் அவர்களது அரசியல் கூட்டாளிகளும் சோனியா காந்திக்கு பாரத தேசத்தையே சமர்ப்பணம் செய்துவிட்ட பிறகு இந்தச் சிறு நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்வதில் எனக்கு என்ன தயக்கம்?

இந்தக் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் பாஜகாவை கொஞ்சம் உலுக்குவோமே, புதிதாக எதையாவது செய்யத் தூண்டுவோமே என்று ஓரளவுக்கு எதிர்மறை போல் தோன்றும் ஆதங்க கட்டுரையை எழுதினேன்.

  • ஆர்.நடராஜன்


3 COMMENTS

  1. மோடியை காப்பாற்ற கட்டுரை எழுதலாம் ஆனால் மக்களை காப்பாற்ற………….

  2. தங்களின் ஆயிரம் கட்டுரைகள் காற்றில் எறிந்த அம்புகள் .எங்கோ விழும் ,எங்கே முடியும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்

  3. சரியான கருத்து. நீண்ட நாள் பலனளிக்கும் திட்டங்களை மக்கள் ஏற்கத் தயாரில்லை. ஜிஎஸ்டியால் விலைவாசி குறைந்துள்ளது. பெட்ரோல் விலை சந்தைப் பொருளாதார மாற்றங்களை பொறுத்து மாறுகிறது. மக்களிடம் சொல்லவேண்டியது இதுதான். இதை பாஜக செய்தல் மிகமிகமிக அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories