பத்தனம்திட்ட: மலையாள மாதமான கன்னி மாதம் தொடங்க இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்.16ஆம் தேதி திறக்கப்பட்டு செப்.21ல் அடைக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டம் பம்பா நதிப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மெதுமெதுவாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றனர். சபரிமலை யாத்ரீகர்களுக்கு தங்கும் வசதி, குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் மகர ஜோதிக்கு முன்னதாக அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்ய வேண்டிய நிலையில் தேவசம் போர்டு உள்ளது.




