ஓய்வை பற்றி யோசிக்காதீர்கள்: தோனிக்கு பாடகி லதா மங்கேஷ்கர் கோரிக்கை!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

images 55 - 2026உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அத்துடன் உலகக் கோப்பை தொடரிலிருந்து முற்றிலும் வெளியேறியது.

MS Dhoni - 2026இந்தப் போட்டியில் இந்திய வீரர் தோனி அவுட் ஆன பிறகு சமூக வலைத்தளங்களில் ‘#ThankYouMSD’ , ‘#ThankYouDhoni’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது.

Lata Dhoni 1 - 2026இந்நிலையில் தோனி தனது ஓய்வு முடிவை தற்போது அறிவிக்க கூடாது என்று பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தோனிஜி, நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்க போகிறீர்கள் என்று தகவல் வருவதை நான் சில நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அது குறித்து யோசித்து கொண்டிருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் இந்திய அணிக்கு உங்களுடைய ஆட்டம் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் தற்போது ஓய்வு குறித்து யோசிக்க வேண்டாம் என்பது என்னுடைய கோரிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

IMG 20190712 122124 - 2026அத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு தான் பாடிய பாடல் ஒன்றை அர்ப்பணித்து, “நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் நாம் தோற்கவில்லை. உங்களுக்கு இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.