டாஸ்மாக் திறந்த நாளன்றே… நண்பர்களால் இளைஞர் படுகொலை!

Published:

madurai tasmac sales harathi
madurai tasmac sales harathi – representational picture

டாஸ்மாக் திறந்த நாளன்று நண்பர்களால் இளைஞர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறந்த முதல் நாள் அன்றே மது போதையில் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட இளைஞர் குறித்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மனோகரன் மகன் விக்கி என்ற விக்னேஷ்வரன் (28) இவரும் இவரது நண்பர்கள் மூன்று பேரும் நேற்று அரசு டாஸ்மாக் திறக்கப்பட்டதால் அங்கு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு முள்ளிப்பள்ளம் அருகே உள்ள தென்னந்தோப்பில்  நண்பர்களுடன் மது அருந்தினர். அப்போது குடி போதை தலைக்கேறியதும் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் அவர்களுக்குள் சண்டை உண்டானது. அப்போது கற்கள் மற்றும் கத்தியால் தாக்கியதில், ரத்த காயம் உண்டானது இந்த சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் விக்னேஷ் இறந்து விட்டார். இதனை பார்த்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கியராஜ் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா காடுபட்டி எஸ்ஐ.,க்கள் மாரி கண்ணன் அருண்பாண்டி மற்றும் போலீசார் விக்னேஷ் சடலத்தை சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர்

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

பின்னர் விசாரணை செய்கையில் மது போதையில் நண்பர்கள் தாக்கப்பட்டதில் விக்னேஷ் இறந்துவிட்டதாக தெரியவந்தது. தப்பி ஓடிய நண்பர்களை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தேடி வருகின்றனர்

நண்பர்களான மனோகரன் மகன் கார்த்தி, பிச்சை மகன் வைரமணி, திருப்பதி மகன் வேல்முருகன் ஆகியவர்கள்தான் விக்னேஷை தாக்கியவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்த செய்தியால், முள்ளிப்பள்ளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related articles

Recent articles

spot_img