thuth sakar
thuth sakar

இளைஞர்களின் செயலால் சரக்கு இரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்தவர்கள் ப்ரஜிவால், மனிஷா, வினோத் மற்றும் கவுரவ். இவர்கள் 4 பேரும் தங்களது இரண்டு நண்பர்கள் என 6 பேரை அழைத்துக்கொண்டு, பெல்காம் மாவட்டத்தில் உள்ள மகாராஷ்டிரா எல்லையில் அமைந்திருக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு (Dudhsagar Falls) சென்றுள்ளனர்.

thuth sakar 1
thuth sakar 1

இவர்கள் அங்குள்ள தண்டவாள பகுதி அருகே இருந்து நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்துக்கொண்டு இருக்கும் போது, தண்டவாளத்தின் வழியே பயணம் செய்துள்ளனர்.

இதன்போது, இரயில் தண்டவாளத்தில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து கிடந்துள்ளது.

திடீரென அவ்வழியாக இரயில் வரும் சத்தமும் இவர்களுக்கு கேட்க, அது பயணிகள் இரயிலாக இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு விடுமே என்ற எண்ணத்தில், அருகேயிருந்த இரயில்வே பராமரிப்பு பணியாளருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

thuth sakar 2
thuth sakar 2

மேலும், விரைந்து செயல்பட்டு இரயிலை நிறுத்தும் பொருட்டு, அவர் அணிருந்திருந்த சிகப்பு சட்டையை கழற்றி வாங்கி இரயில் வரும் திசையை நோக்கி, இரயிலை நிறுத்தக்கூறி சட்டையை உயர்த்திப்பிடித்து அசைத்துக்கொண்டு வந்துள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இளைஞர்கள் அனைவரும் சிவப்பு எச்சரிக்கை அடையாளத்துடன் ஓடி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த இரயில் ஓட்டுநர், இரயிலை விரைந்து செய்யப்பட்டு நிறுத்தியுள்ளார்.

thuth sakar 3
thuth sakar 3

ஆனால், இரயிலுக்கும் – மரம் முடிந்து கிடந்த இடத்திற்கு வெறும் 10 மீ இடைவெளி முன்புதான் இரயில் நின்றுள்ளது.

இரயிலை நிறுத்தியதும் அது பயணிகள் இரயில் இல்லை, சரக்கு இரயில் என்பதை உறுதி செய்து இளைஞர்கள் குழு நிம்மதி பெருமூச்சு விட்டது. இதனையடுத்து, இரயில் எஞ்சின் ஓட்டுநர் தகவலை இரயில் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இளைஞர்களின் விரைவான செயல் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending