ஆண்டாளை இழிவுபடுத்தி… திருப்பதி உண்டியலில் கண்வைத்து… மத நல்லிணக்கம் வளர்க்கும் திமுக!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

dayanidhi maran - 2026

மத ஒற்றுமைக்காக திமுக., தொடர்ந்து பாடுபடும் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசினார்.

குர்ஹானி வணிகர் சங்கம் சார்பில் சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியவர், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்வதாகக் கூறினார்.

அப்போது அவர், ரம்ஜானில் குறைந்தது எனக்கு 20 பிரியாணியாவது வந்துவிடும். நாங்கள் நாகூர் தர்காவுக்கு போகிறோம். வேளாங்கன்னி சர்ச்சுக்கு போகிறோம்.. இந்துக்கள் நாங்கள் எங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்கிறோம். ஆனால் நாங்கள் முஸ்லிம்களுடனோ கிறிஸ்துவர்களுடனோ சண்டை போடவில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் என அரசியல் ரீதியாக மத நல்லிணக்கத்தை பலரும் பேணி வந்திருக்கிறார்கள்… என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.