கடும் எதிர்ப்பையும் மீறி… தமிழகத்தில் நுழைந்தது ராம ராஜ்ய ரத யாத்திரை! பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

Published:

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று காலை தமிழகம் வந்தது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் “ராமராஜ்ஜிய ரத யாத்திரை” கடந்த மாதம் 13-ந் தேதி அயோத்தியில், உத்தரப்பிரதேச முதல்வரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது இந்தியாவின் பல மாநிலங்களைக் கடந்து  இன்று  தமிழகத்தில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியே  ரதயாத்திரையாக வந்தது.

இந்த ரத  யாத்திரைக்கு தமிழகம் கேரளா  எல்லையில் உள்ள கோட்டைவாசல் பகுதியில் இன்று காலையில் பாஜக, இந்துமுன்னணி சார்பில் மேளம் தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்த ரதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர் இந்த ரதம் புளியரைவந்த போது  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் நின்று வரவேற்பு அளித்தனர். பின்னர் இந்த ரதம் செங்கோட்டை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலை வந்தடைந்தது. தென்காசியில் வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சாலையில் நின்று ரதத்தை மலர் தூவி வரவேற்றனர்.

விஎச்பி ரத யாத்திரைக்கு தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். மார்ச் 19 தொடங்கி 23 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், நெல்லை மாவட்டம் தென்காசி ,செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில்  பாதுகாப்புக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக  மாவட்டம் முழுவதும் 32 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img