எங்களுடன் எங்கள் தாய்நாடும் மறக்கடிக்கப் பட்டு விடும்! புலம்பெயர் இலங்கைத் தமிழரின் சோகம்!

Published:

srilanka tamils - 2026

புலம்பெயந்து வாழும் எங்கள் (மரணத்துக்கு பின்பு ) முற்றாக இலங்கை தொடர்புகள் அழிந்துவிடும் . ஏன் என்றால் நாங்கள் திருமணம் செய்ய பெண் எடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் எங்களுடன் முடிவடையும்!

ஊருக்கு பணம் அனுப்புவதும் எங்களுடன் முடிவடையும்!  இலங்கைக்கு விடுமுறையில் செல்வதும் எங்களுடன் முடிவடையும்.

அப்பப்பா, அம்மப்பா, அம்மமா, அப்பமா, மாமா, மாமி என்று நேரில் போய் பார்ப்பதும், கோவில் திருவிழாக்களுக்கு போவதும் எங்களுடன் முடிவடையும்.

எங்கள் ஆயுளுக்குப் பின் எங்கள் பிள்ளைகள் ஏன் அங்கே போவார்கள்? எம் அடுத்த சந்ததி இங்கே வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்ளும்!

அங்கு பணம் அனுப்ப அவர்களுக்கு யாரும் இல்லை! போன் கதைக்க யாரும் இல்லை! அவர்கள் அங்கு டூர் போகும்போது எதாவது ஹோட்டலில் இருந்து நிலாவரை கிணத்தையும், கீரிமலை, சிகிரியா எல்லாத்தையும் ரசித்துவிட்டு ஒரு வேற நாட்டுக்காரர் மாதிரி மட்டும் என்ஜாய் பண்ணமுடியும்.

அதோடு நிறைய காசும் 1 நாள் விமான பயணமும் செய்து அங்கு ஏன் போவார்கள் ?அவர்களுக்கு வரும் பெண் அல்லது ஆண் நண்பர்கள் அதை விரும்புவார்களா ?

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

என்ன கொடுமை !!!! எங்களுடன் எங்கள் பிறந்த நாடு மறக்கப்படுகிறது..!

இப்போது நாங்கள் மலேசிய, சிங்கப்பூர் வாழ் தமிழரை எப்படி பார்கிறோமோ அதைப்போல எங்கள் பேரப்பிள்ளைகள் இனி யாழ்ப்பாணத்தையும் ஒரு தமிழ் இனம் வாழும் இடமாக உலகப்படத்தில் காட்டுவார்கள் !

(தவிர்க்க முடியாத உண்மை)

-இப்படிக்கு,

புலம் பெயர்ந்து வாழும் அப்பாவி இலங்கைத் தமிழன் 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img