எத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது!

அடடே... அப்படியா? கோவை சற்றுமுன்
edappadi pazanisay - 2026
File picture

ஸ்டாலின் போல் எத்தனை பேர் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இருக்கவே இருக்காது என்று எதிர்க் கட்சிகள் பேசினர். 10 நாட்கள்கூட கூட இந்த ஆட்சி நீடிக்காது என்றனர். ஆனால், இன்று இரண்டு ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்…. என்றார்.

மேலும், ஸ்டாலின் போல எத்தனை பேர் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றார் அவர்! 

எதிர்கால போக்குவரத்தினைக் கருத்தில் கொண்டும், நாட்டின் நலன் கருதியும்தான் இந்த எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் தேவையற்ற புகார்களை கூறி வருவதாகவும், இதைவிட வேகமாகவும் விரைந்தும் எப்படி பணியாற்ற முடியும் என்பதை அவர்கள் சொன்னால், அதற்கேற்ப தாங்கள் வேலை செய்ய தயார் என்றும் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.