மதுரை நகரில் பல இடங்களில் வண்டிகளில் விற்பனைக்காக இளநீர் இருந்தும், வாங்கத்தான் பொதுமக்கள் வருவதில்லை என இளநீர் வியாபாரி வருத்தம் தெரிவித்தார்.
மதுரை நகரில் பல இடங்களில் வண்டிகளில் இளநீர் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தாலும், கோடை காலம் கடுமையான வெயில் இருந்தும், இளநீர் வாங்கத்தான் ஆட்கள் வரவில்லை. மேலும், இளநீர்களை மொத்த வியாபாரிகள் மதுரை புறநகர் பகுதிகள், அய்யம்பாளையம், நத்தம், வத்திப்பட்டி, திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இளநீரை வாங்கி , லாரிகள் மூலமாக மதுரைக்கு கொண்டு வரப்பட்டு சில்லரை வியாபாரிகளுக்கு இவர்கள் விற்பனை செய்கின்றனர்.
இதை, சில்லரை வியாபாரிகள் விலைக்கு வாங்கி, கை வண்டிகள் மூலம் பொதுமக்களுக்கு ரூ. 30, 40, 50 ஆகிய விலைகளில் விற்பணை செய்து வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் நிலவும் பண பற்றாக்குறையால் நடுத்தர, ஏழை மக்கள் பலர் கைவண்டிகளில் விற்பனை செய்யப்படும் இளநீரை விலைக்கு வாங்க தயங்குகின்றனர்.
கடந்த ஆண்டு, மதுரை நகர் பகுதிகளில் இளநீர் விற்பனை கொடி கட்டிபறந்ததாம், ஆனால் பல நாட்களாக மதுரை நகரில் இளநீர் விற்பனை மந்தமாக உள்ளது. வாங்கிய விலைக்கே, இளநீரை விற்பனை செய்யலாம் என்றாலும் வாங்கத்தான் ஆள் இல்லை என்றார் கைவண்டி இளநீர் விற்பனையாளர் மணி.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை