அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல்?உத்தரப்பிரதேச காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை!

ayothi 1 - 2026

உத்தரப்பிரதேசத்தின் கோயில் நகரான அயோத்தியில் தீவிரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அயோத்தியில் ராம்ஜென்ம பூமி,-பாபர் மசூதி இடையிலான பிரச்சினை நூற்றாண்டு காலமாக நீடித்துவந்தது. அங்குள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் கோயில் கட்டிக் கொள்ள அனுமதித்து நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், முஸ்லிம்களுக்கு அயோத்தி நகரில் மசூதி கட்டிக்கொள்ளவும் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழலில் இன்னும் 4 மாதங்களில் அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருந்தார்.

இந்நிலையில், ஜெய்ஷ் இ தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சமீபத்தில் அவரின் கூட்டாளிகளிடம் டெலிகிராம் செயலி மூலம் பேசிய வீடியோ ஒன்று உளவுத்துறையிடம் சிக்கியுள்ளது.

அதில் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாக்குதலை நடத்த வேண்டும் என்றும், அயோத்தி நகரில் தாக்குதலை நடத்த வேண்டும் என்று தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வீடியோவில் மசூத் அசார் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இதற்கிடையே பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 முக்கியத் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தெரிவிக்கிறது.

தற்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பும், ரோந்துப்பணியும் பலப்படுத்தப்பட்டதால், அங்குத் தீவிரவாதிகள் ஊடுருவும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

இதனால், இந்த தீவிரவாதிகள் நேபாள எல்லை வழியாகக் கடந்த மாதம் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை சந்தேகிக்கிறது.

இந்த தீவிரவாதிகள் 7 பேரும் உத்தரப்பிரதேசம் கோரக்பூர் நகரம், அயோத்தி நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் பதுங்கியுள்ளார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களின் இடத்தை கண்டுபிடிக்கமுடியாமல் உளவுத்துறை திணறி வருகிறது.

உளவுத்துறையின் தீவிர தேடுதல், விசாரணை ஆகியவற்றுக்குப் பின் மொத்தமுள்ள 7 தீவிரவாதிகளில் 5 பேரின் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் முகமது யாகூப், அபு ஹம்சா, முகமது ஷான்பாஸ், நிசார் அகமது, முகமது குவாமி சவுத்ரி ஆகியோர் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்த தீவிரவாதிகள் அனைவரும் உள்ளூர் மக்களிடம் வாகன உதவி, ஆயுத உதவிகளைப் பெற்று மாறுவேடத்தில் இருப்பதால், அடையாளம் காண முடிவதிலும் சிக்கல் இருக்கிறது, எங்குப் பதுங்கி இருக்கிறார்கள் என்பதிலும் சிக்கல் நிலவுகிறது என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து உ.பி. அரசு, அயோத்தி நகருக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது, மேலும், அதுகுறித்து விரிவான ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்ட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories