இதயத்தைத் திருடிவிட்டாள்! கண்டுபிடித்து தாருங்கள்! போலீஸில் புகார் அளித்த இளைஞர்!

heart attack - 2026

என்னிடமிருந்து ஒரு பெண் திருடிய இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள் என்று இளைஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்தாராம். எல்லாம் மராட்டிய மாநிலம் நாகபுரியில் நடந்த கூத்துதான்! போலீஸார் அதற்கு என்ன பதில் சொல்லியிருப்பார்கள்?!

மராட்டிய மாநிலம் நாகபுரியில், கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 82

லட்சம் மதிப்புள்ள பொருட்களை

உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியை போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திருட்டு வழக்குகள் குறித்து பேட்டி அளித்தார் நாகபுரி காவல் ஆணையர் பூஷண் குமார் உபாத்யாய.

அப்போது அவர் ஒரு வித்தியாசமான திருட்டுப் புகார் குறித்தும் கூறி, செய்தியாளர்களை சிரிக்கவும் அசரவும் வைத்தார். திருடப்பட்ட

பொருட்களை நாங்கள் பெரும்பாலும் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம். ஆனால், எங்களால் தீர்வே காண முடியாத சில புகார்களையும் நாங்கள் பெற வேண்டியுள்ளது.

நாகபுரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விசித்திரமான புகாருடன் காவல் நிலையத்துக்கு வந்தார். அவர் அளித்த புகாரைக் கேட்டு போலீசாருக்கு தலையே சுற்றியது. தனது இதயத்தை பெண் ஒருவர் திருடிவிட்டார் என்றும், அதனைக் கண்டுபிடித்து தாருங்கள் என்றும் புகார் எழுதிக் கொடுத்தால், போலீசார் என்ன செய்ய முடியும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அவரது புகாரைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரிடம் அதெல்லாம் முடியாது என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால் சம்பந்தப் பட்ட நபர் விடாப்பிடியாக இருக்கவே, உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு என்ன செய்வது என்று கேட்டுள்ளனர்.

இதையடுத்து, புகார் அளிக்க வந்த அந்த இளைஞரிடம் இப்படிப் பட்ட புகாரை பதிவு செய்வதற்கு இந்திய சட்டத்தில் எந்த உட்பிரிவும் இல்லை எனக் கூறி, இந்த பிரச்னைக்கு எங்களிடம் தீர்வு இல்லை. திரும்பிச் செல்லுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தனர்… என்று கூறி, செய்தியாளர்களை சிரிக்கவும் யோசிக்கவும் வைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories