6 மாசத்துக்கு ஒரு தடவ ஏன் லண்டன் போற? பொண்டாடிய காசிக்கு அனுப்பிட்டு இங்க என்ன பண்ணுற?: ஸ்டாலினுக்கு தினகரனின் கேள்விகள்!

Published:

ttv dinakaran - 2026

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது! இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர்
டிடிவி தினகரன் பேசிய போது, திமுக., தலைவர் மு.க. ஸ்டாலினை ஒருமையில் பேசி, கேள்விகள் கேட்டார்.

பொண்டாட்டியை காசிக்கு அனுப்பிவிட்டு உன் அப்பாவிற்கு பகுத்தறிவு பகலவன்னு விருது கொடுப்ப..! நீ யாரு… உன் குடும்பம் என்ன… எல்லாம் எங்களுக்கு தெரியும் ‘திருட்டு ரயில் ஏறி ஓடி வந்த குடும்பத்தைச் சேர்ந்த நீ பேசலாமா? என்னை 420 என்கிறாய்..

6 மாசத்துக்கு ஒருக்க லண்டன் ஏன் செல்கிறாய் என்று மக்களுக்கு சொல்லு… என்று ஒருமையில் பேசியதோடு மட்டுமல்லாமல் உன் சொந்த தொகுதியான திருவாரூரில் நிற்க பயந்துகொண்டு ஓடிய ஆளுதான…?! என்று டிடிவி தினகரன் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து நேரடியாகவே பேசினார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் Ttv தினகரன், முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டி பழனிசாமி, புகழேந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய தினகரன் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளையும் முன்னாள் அமைச்சர் பழனிசாமி தொகுதிக்கு செய்துள்ள வளர்ச்சிப் பணிகளையும் பட்டியலிட்டார்.

திமுக அதிகார பூர்வ கட்சிப் பத்திரிகையில் தன்னைத் தாக்கி எழுதியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிடிவி தினகரன் பேசிய பேச்சுக்கள் இப்போது ஊடகங்களில் மட்டுமல்ல… சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. அரசியல் மட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img