பாரதமாதாவை #MeToo..? என் ரத்தம் கொதிக்கிறது: தமிழிசை சௌந்தர்ராஜன்!

Published:

tamilisai 2 - 2026

லயோலா கல்லூரியில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், லயோலா கல்லூரிக்கு எதிரான போராட்டத்தையும் துவக்கி வைத்துள்ளது.

இந்நிலையில் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்.

அவர்களது புகாரை ஏடிஜிபி பெற்ற சில நிமிடங்களில் லயோலா கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிடப் பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், லயோலா கல்லூரியில் நடந்த ஓவிய காட்சியில் பாரத மாதாவை #⃣MeToo என குறிப்பிட்டு ஓவியம் வரைந்ததை கண்டு ரத்தம் கொதிக்கிறது. இதற்கு கல்லூரி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் இல்லையெனில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்… என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img