இந்த வருடம் ராமராஜ்ய ரத யாத்திரை… தமிழகத்தில் இருந்தே துவங்குகிறது!

Published:

Ramarajya ratha yathra5 - 2026

ராமராஜ்ய ரதயாத்திரை இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்தே புறப்படும் எனக் கூறியுள்ளனர்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராமராஜ்ய ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீசக்தி சந்தானந்த மஹரிஷி, வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரதயாத்திரை 10 மாநிலங்களைக் கடந்து ஏப்ரல் 14 ஆம் தேதி அயோத்திக்குச் சென்றடையும் என்று தெரிவித்தார்.

இதே ராம ராஜ்ய ரத யாத்திரை, கடந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தொடங்கியது. உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடி அசைத்து ராமராஜ்ய ரத யாத்திரையைத் தொடங்கிவைத்தார். உத்தரப் பிரதேசத்தில் தொடங்கி, பல்வேறு மாநிலங்கள் வழியாக, இறுதியில் தமிழகத்தில் நிறைவடைந்தது அந்த ரத யாத்திரை.

வருடம் தோறும் நடைபெறும் ரதயாத்திரைக்கு கடந்த வருடம் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்களாலும், திமுக.,வின் எதிர்ப்பாலும் பெரிய விளம்பரம் கிடைத்தது. தமிழகத்தில் ரத யாத்திரை நுழைந்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை கேரள எல்லைப் பகுதியில் பலத்த வரவேற்பு கொடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. பின்னர் பெரும் களேபரமானது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img