கலக்கும் எடப்பாடியார்… கலகலக்கும் ஸ்டாலின் கூடாரம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்

stalin edappadi - 2026

சபாநாயகர் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் திமுக.,வின் செயல்பாடு பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

தேர்தல் முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த மாத இறுதியில் அரசியல் நிலவரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக., தரப்பு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில், திமுக., சபாநாயகர் மேல் கொண்டு வரப் போகிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தினால் எந்தப் பயனும் இல்லை என்று கூறுகின்றார்கள் விவரம் அறிந்தவர்கல்.

3 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்வது தவறு என கருதி இருந்தால் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்னதாகவே அத்தகைய நடவடிக்கை கூடாது என்று மு.க.ஸ்டாலின் அளித்திருக்க வேண்டும்.

மேலும் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை சட்டப்படி கொண்டு வரமுடியாது. எனினும் திமுக அத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறுவது, 3 எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கையை இன்னும் துரிதப்படுத்துவதாகவே இருக்கிறது. .. என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

எடப்பாடி ராக்ஸ் (rocks)
ஸ்டாலின் வீப்ஸ் (weeps)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.