தமிழகத்தில் தான் படித்த பள்ளியை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்த சகோதரா்கள் ..!

sumart school - 2026

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசு பள்ளியை தனியாருக்கு பள்ளிக்கு நிகராக மாற்றிய இரு சகோதரர்களை பாராட்டு மழையில் நனைய விட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியா்கள்…!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இந்த பள்ளி கடந்த 1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிக பழமைவாய்ந்த அரசுப்பள்ளியாகும். . இப்பள்ளியில் கீழடி, பசியாபுரம், காமராசர் காலனி, பள்ளிசந்தை புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்பு பயின்று வந்துள்ளனா்.

காலப்போக்கில் அரசு பள்ளிகளின் முறையான பரமரிப்பு இன்றி சுகாதரமின்றி, பழுதடைந்து வந்துள்ளது. இதன் காரணமாகவும், தனியார் பள்ளிகளின் உள்ள மோகத்தாலும் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. கடந்த ஆண்டு 180 மாணவர்களே படித்தனர்.

இதையறிந்த கீழடி முன்னாள் ஊராட்சித் தலைவர் வெங்கடசுப்ரமணியன் தனது சகோதரர் மருத்துவர் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்ற முடிவு செய்தார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அதன்படி பள்ளிக் கட்டிடங்களை மராமத்து செய்து, டைல்ஸ் பதித்து புதுப்பித்தனர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான இருக்கை, சுத்தமான கழிவறை, சுகாதாரத்தை பேணும் வகையில் குப்பைகள் உள்பட பல்வேறு வசதிகளை கொடுத்துள்ளனர்.

மேலும் நான்கு கட்டிடங்களிலும் ஸ்மார்ட் வகுப்பு தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக ரூ.15 லட்சம் செலவு செய்தனர். இதனால் நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வெங்கடசுப் ரமணியன் கூறியதாவது:

நான் இந்தப் பள்ளியில் தான் படித்தேன். அப்போது மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

வசதிக்காக பலர் தனியார் பள்ளியை நாடுவதாக அறிந்தேன். இதையடுத்து சகோதரர் பன்னீர்செல்வமும், நானும் சேர்ந்து இப்பள்ளியை தரம் உயர்த்தினோம்.

தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். இது எங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனது சகோதரர் பன்னீர்செல்வம் ஈரோட்டில் கண் மருத்துவராக உள்ளார்.

அவர் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று கீழடியில் இலவசக் கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அடுத்ததாக, அரசு மேல்நிலைப் பள்ளியையும் மேம்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.

கீழடி பள்ளியை மேம்படுத்தியதைப் பார்த்து பக்கத்து கிராம மக்களும் தங்களது பள்ளியை சீர்செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories