ஆமா… அதுக்கு கீழதான் ஒண்ணுமே இல்லியே… என்னாத்த ரிப்பேர் செஞ்சீங்க ராகுல்..?!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

rahul helicoptor repair - 2026

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை பாதுகாப்புக் குழுவினருடன் சேர்ந்து தானும் சரி செய்யும் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் படம் வைரலான நிலையில், பாஜக.,வைச் சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், அறிவுப் பூர்வமாக ஒரு கேள்வியைக் கேட்டு, ராகுல் விசிறிகளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மக்களவை தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக் கிழமை (இன்று) நடைபெறும் நிலையில், ஹிமாச்சல் பிரேதசத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக, ஹிமாச்சல் பிரேதசத்தில் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சென்றார். அதில் சிறிய பழுது ஏற்பட்டுள்ளது. அந்தப் பழுதை ராகுல் சரிசெய்தார் என்று காங்கிரஸ்காரர்கள் அவரை ஒரு புத்திசாலி போலவும் எஞ்சினியர் போலவும் காட்டுவதற்காக முயன்றனர். அதற்காக, பாதுகாப்புக் குழுவினருடன் இணைந்து ராகுல் காந்தி அந்த பழுதை நீக்கியதாக ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.

rahul helicoptor repair insta - 2026அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “சிறிய பழுதுதான். அனைவரும் கூட்டாக இணைந்து முயற்சித்ததால் விரைவாக பழுது சரிசெய்யப்பட்டது. பயப்படும் அளவிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதை அடுத்து ராகுலின் இந்தப் பதிவிற்கு பலரும் பாராட்டு தெரிவிக்க, அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக்கப் பட்டது.

இந்நிலையில், பாஜக.,வின் எம்பி ராஜீவ் சந்திரசேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், வாழ்நாளில் ஒரு முறை கூட எந்த வேலையும் செய்திராத பரம்பரைத் தலைவர், போட்டோவுக்காக ஹெலிகாப்டரை ரிப்பேர் செய்தாராம். ஆனால், ஹெலிகாப்டரின் அடிப் பகுதியில் ஒன்றுமில்லை. எஞ்சின், கடத்தும் திறன் அனைத்தும் ஹெலிகாப்டரின் மேற்பகுதியில் உள்ளது. ஆமா ராகுல் காந்தி என்னதான் ரிப்பேர் செய்தார்?! என்று கேட்டுள்ளார்.

இந்தக் கேள்வியும் ராகுலின் ரிப்பேர் படமும் சேர்ந்து ராகுலின் இமேஜை ரிப்பேராக்கியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.