குமரேசா, அந்த மணியை வேகமாக அடி..

“குமரேசா, அந்த மணியை வேகமாக அடி..”

படிப்பறியாத பாமர மக்கள் முகத்தில் பக்திப் பரவசம்.! அவர்களை அழைப்பதற்காகப் பெரியவாள் கையாண்ட யுக்தி)

சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஆந்திர நாட்டில் பயணம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் சில பேர்கள் மட்டும் உடன் செல்வார்கள். வேறு எவ்விதமான படாடோபமும்,பிருதாவளிகளும் இல்லை. பின்தங்கிய பகுதியிலுள்ள மக்களுக்கு பெரியவாளைப் பற்றி தெரிந்தே இருக்காது!

முன்னதாகவே சென்று,பெரியவாள் தங்குவதற்கான இடம் தேர்ந்தெடுப்பது, உடன் செல்வோர் தங்குவதற்கான வசதிகள் – என்று எந்தத் திட்டமும் கிடையாது. “இங்கே தங்கலாம்” என்று பெரியவாள் சொன்னால், மரத்தடியே ஆனாலும் அங்கேயே தங்கி விடுவோம்.

ஒரு கிராமம். அங்கு ஒரு சிறு சிவன் கோவில். பெரியவாள் அங்கு தங்கி சிரம பரிகாரம் செய்து கொண்டபோது, ஊர் மக்கள் வந்து தரிசனம் செய்து கொண்டார்கள்.

பின்னர்,செய்தி பக்கத்துக் கிராமங்களுக்குப் பரவியது.

கோவிலில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் பிக்ஷை செய்துவிட்டு, பெரியவாள் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். தொண்டர்களுக்கும் களைப்பு, ஆங்காங்கே படுத்துக் கொண்டார்கள்.

உச்சிகால பூஜை முடிந்தது. சிவாசாரியாருக்கு வீட்டுக்குப் போவதிலேயே குறி போலும்! வழக்கம்போல், வெளிக்கதவை பூட்டிக்கொண்டு போய்விட்டார். (பி.கு.)ஸ்வாமிகள் உள்ளே)
சுற்றுப்புற மக்கள் அப்போது தான் கோவிலுக்கு வந்தார்கள். கதவு பூட்டியிருந்தது.’சுவாமிகள் புறப்பட்டுப் போய்விட்டார்களா? இந்த வெய்யிலில் எங்கே போயிருக்க முடியும்! பெரியவாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்காமற் போய்விட்டதே?’என்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத் திரும்பிப் போகிற வேளையில்,பெரியவாள் விழித்துக்கொண்டார்கள்.

“கோவில் கதவு சார்த்திப் பூட்டியிருக்கிறது” என்று குறை சொன்னார், ஒரு தொண்டர்.

“அடடா…ஜனங்கள் வந்து ஏமாந்திருப்பார்களே? எல்லாரையும் எப்படி அழைப்பது?”

கோவில் பிராகாரத்தில்,உயரத்தில் ஒரு பெரிய மணி கட்டியிருந்தது

.”குமரேசா, அதை வேகமாக அடி..”

எதிர்பாராமல் கோவில் மணியோசை கேட்டதும் ஜனங்களுக்குப் பிரக்ஞை வந்தது. கோவிலுக்கு ஓடோடிவந்தார்கள்.கோவில் காவற்காரர் திகைத்துப் போய் கதவைத் திறந்தார்.

படிப்பறியாத பாமர மக்கள் முகத்தில் பக்திப் பரவசம்.! அவர்களை அழைப்பதற்காகப் பெரியவாள் கையாண்ட யுக்தியைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போனார்கள்.

“எதுவும் தெரியாத எங்களையும் பொருட்படுத்தினார்களே! என்று நெஞ்சாரப் போற்றினார்கள்.

பெரியவாள் பார்வை சமதர்மப் பார்வை; மனித ஜீவன் என்ற ஒரே பார்வை

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories