இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு.. அதான் பெரியவாளோட தேஜஸ்!

“இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு..ஆங்..அதான் பெரியவாளோட தேஜஸ்…தேஜஸ்!”

(மத்திய அமைச்சரின் புகழாரம்)

கட்டில்,மெத்தை,தலைகாணி மறுத்த சம்பவம்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

சிவாஸ்தானத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில் பெரியவாள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய தினம், டில்லியிலிருந்து ஓர் அமைச்சர்தரிசனத்துக்கு வந்தார்..

முதன் முதலாக ,வடநாட்டுத் துறவிகளின் ஆசிரமங்களை போல…காஞ்சி மடம்ஆசிரமமும் பெரிய பெரிய கட்டடங்கள் உள்ளதாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தார் போலும். சோபா, ஏர் கண்டிஷன்,கம்பளம்,டேபிள் என்றுகற்பனையோடு வந்திருந்தார்.

ஆனால் உலகம் போற்றும் பெரியவாள்,ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார்கள் .நாடு, மொழி, ஜாதி கடந்து உலகத்தோரால் தெய்வமாக மதிக்கப்படும் அவதார புருஷரா இவர்?

கட்டில் அருகில் வந்து வந்தனம் செய்ததும், அமைச்சரின் சந்தேகங்கள் விலவிட்டன.

பெரியவாளுடைய பார்வையின் ஈர்ப்பினால் வசீகரிக்கப்பட்டு மெய் மறந்தார். எட்டாவது உப்பரிகையில், பத்து கடோத்கஜர்கள் பணிவிடை செய்ய வெல்வெட் மெத்தையில் அலட்சியமாக உட்கார்ந்திருக்க வேண்டிய மகாத்மா,நீளக் காவித் துணியை அரைகுறையாக அணிந்து கொண்டு,கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தார்.

பெரியவாள், அமைச்சருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பின்னர் ஒரு சால்வையை போர்த்தி மரியாதை செய்யச் சொன்னார்கள். ஒரு மாம்பழத்தைப் பிரசாதமாகக் கொடுத்தார்கள்.

பெரியவாகிட்ட ஒரு விண்ணப்பம்..” -அமைச்சர்.

“என்ன?”-பெரியவாள்.

“நான் ஊருக்குப் போய் நல்ல மரக்கட்டில், மெத்தை, தலைகாணி அனுப்பி வைக்கிறேன் .பெரியவா தயவுசெய்து ஏற்றுக் கொண்டு உபயோகிக்கணும் …”

பெரியவாள் சொன்னார்கள்; “அடாடா..அப்படியெல்லாம் சிரமப்படாதீங்கோ ..அதெல்லாம் வேண்டாம்.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொள்வதும்,உட்காருவதும் ரொம்ப சுகம்; ஈடு இணையே இல்லை. ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் படுத்துக் கொண்ட மாதிரி சுகமா இருக்கும்!”

வந்த அமைச்சருக்கு ஒரே ஏமாற்றம். ஒரு சிறு சேவை கூட செய்ய முடியவில்லையே என்று ஆதங்கம்.

“எளிமையாயிருக்கக் கூடிய காந்தி, வினோபா- வெல்லாம் பார்த்திருக்கேன். ஆனா, இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு.. ஆங்..அதான் பெரியவாளோட தேஜஸ்…தேஜஸ்!” பூரண திருப்தியுடன் திரும்பிச் சென்றார் மத்திய அமைச்சர்.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories