“அரிசி வாங்கலியோ…அரிசி!”

“அரிசி வாங்கலியோ…அரிசி!”

(”பெரியவா…! எனக்கோ வயதாகி விட்டது. எந்த திருநாமத்தை ஜபித்தால் எனக்கு நற்கதி கிடைக்கும் என அறிவுறுத்தக் கூடாதா?” -மூதாட்டி)

(அரி சிவா ங்கலியோ-பெரியவாளின் சிலேடைப் பேச்சு)

கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்

நன்றி-தினமலர்

அந்தக் காலத்தில் அரிசியைத் தெருவில் கூவி விற்பார்கள். மக்களும் தெருவில் வரும் வியாபாரியிடம் பேரம் பேசி வாங்குவர்.

ஒருநாள் வியாபாரி ஒருவர் தெருவில் அரிசி விற்றுச் சென்றார். அவரின் சத்தம் காஞ்சி மகாசுவாமிகள் முகாமிட்டிருந்த இடம் வரை தெளிவாகக் கேட்டது

. பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் சுவாமிகள்.

வரிசையில் மெல்ல நடந்து வந்தாள் மூதாட்டி ஒருவர். அவர் காது கேட்காததால், வலதுகையால் செவி மடலைக் குவித்தபடி மற்றவர் பேச்சைக் கேட்டார்.

இந்நிலையில் சுவாமிகளை வணங்கி, ”பெரியவா…! எனக்கோ வயதாகி விட்டது. எந்த திருநாமத்தை ஜபித்தால் எனக்கு நற்கதி கிடைக்கும் என அறிவுறுத்தக் கூடாதா?” என்றார்.

சுவாமிகள் தீர்த்தம் வழங்கியபடி, ”தெருவில் அரிசி வியாபாரி கூவிக் கூவிச் சொல்கிறாரே? அதன்படி நடந்து கொள்!” என்றார் சிரித்தவாறே.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 28 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

மூதாட்டிக்கு புரியவில்லை. அருகில் நின்றவர்களுக்கும் புரியவில்லை.

”என்ன! சொல்றது புரியலையா?” எனக் கேட்டார் சுவாமிகள்.

”எப்போதும் ‘ஹரி’ ‘சிவ’ நாமத்தையும் ஜபித்தால் போதும். துக்கமெல்லாம் விலகும். மனதில் நிம்மதி பிறக்கும். அரிசி வியாபாரி என்ன சொல்லிக் கூவுகிறார் தெரியுமோ? ‘அரிசி வாங்கலியோ… அரிசி’ என்று தானே கூவுகிறார்? யோசித்தால் புரியும். அரியும், சிவாவும் இருக்குமிடத்தில் எல்லா மங்கலங்களும் உண்டாகும். இத்திருநாமங்களை ஜபித்தால் பாவம் தொலையும். ‘அரிசி வாங்கலியோ’ என்பதைக் கேட்கிற போது வயிற்று ஞாபகம் வந்தால் மட்டும் போதாது. ஆன்மாவின் ஞாபகமும் நமக்கு வர வேண்டும். வயிற்றுப் பசிக்கு அரிசியைச் சமைத்துச் சாப்பிடலாம். ஆன்மாவின் பசிக்கு அரி, சிவ நாமங்களை இடைவிடாது நாம் ஜபிக்க வேண்டும்!”

சுவாமிகளின் சிலேடையான பேச்சைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories