“செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது !

Published:

“செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது !  

“எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு. கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. “-பெரியவா

(ஆஞ்சநேய பக்தருக்கு அருள் புரிந்த நிகழ்ச்சி)

வட இந்தியாவில் வேலை பார்க்கும் நம் ஊர்காரர் ஒருவர், மஹாபெரியவா தரிசனத்துக்கு வந்தார்.

அவருக்கு ஒரு பிரச்சினை.

செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது !

அந்தப் பேச்சு, ஆஞ்சநேயருடைய குரல் என்ற எண்ணம் எப்படியோ வந்துவிட்டது அவருக்கு.

இந்தத் தெய்வீக சக்தியை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா ? நண்பர்கள் தான் சும்மா இருக்க விடுவார்களா ?

குறி சொல்வதற்கு என்று ஒரு நாளை ஒதுக்கினார். யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை ?  எனவே கூட்டமான கூட்டம்.  அதிலும் கட்டணம் ஏதுமில்லை என்றால் கூட்டத்துக்குக் கேட்க வேண்டுமா ?  ஆனால் குறி சொல்கிற அன்பருக்குத்தான் மன நிம்மதி இல்லை.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பெரியவாளிடம் வேண்டிக்கொண்டார் : 

“வடக்கே இருப்பதற்கு எனக்குப் பிடிக்கவில்லை.  பெரியவா அனுக்ரஹத்தாலே, மெட்ராசுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும் ….”

“எங்கிட்ட ஏன் சொல்றே ?  உனக்குத்தான் ஆஞ்சநேயர் அருள் பரிபூரணமா இருக்கே …  ஹனுமானிடமே பிராத்தனை பண்ணிக்கோயேன் ….”

அன்பர், அப்படியே கூசிக்குறுகிப் போய்விட்டார்.

” ஆஞ்சநேயர் பேசுகிறார் என்பது நானாகச் சொன்னதுதான்.  என்ன துர்தேவதையோ தெரியவில்லை.  என்னைத் தூங்கவிடமாட்டேன் என்கிறது .
…. 

அது சொல்கிற பதில் சிலபேர்களுக்குப் பலித்துவிடுவதால் எல்லோரும் நம்புகிறார்கள்.  எனக்குத்தான் நம்பிக்கையில்லை.  பெரியவா என் கஷ்டத்தைப் போக்கணும் …”

பெரியவாள் சொன்னார்கள் :

“எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு.  கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. “

பத்து நாள்கள் கழித்து மகிழ்ச்சியோடு வந்து பெரியவாவை தரிஸனம் செய்தார் அன்பர்.

“என்ன, ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா?”  என்று கேட்டார் பெரியவா குறும்புத்தனமாக. !!!!!

ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆக்ஞைப்படி ( புரட்டாசி பௌர்ணமி திதியில் ) ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது  

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img