பஞ்சசக்தி ஸ்ரூபமாக விளங்கும் அம்மனை பற்றி அறிவோமா?

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம்
Sri Bhuvaneswari - 2026

ஸ்ரீ பஞ்ச சக்தி ஸ்வரூபம்:!!

ஸர்வ காரணத்திற்க்கும் ஆதிகாரணேச்வரீயாக ஜ்வலிப்பது அன்னை ஜகந்மாதா புவனேச்வரீயே!! லோகமெங்கும் வ்யாபித்திருப்பது ஸ்ரீ புவனேச்வரீ தேவீயினுடைய சைதன்யமே!! இப்படி ஸர்வமுமாகவும், ஸர்வதேவதா ஸ்வரூபமாகவும் தேவீயிருந்தாலும் அவளே தன்னிலிருந்து தானே பஞ்ச சக்திகளை ச்ருஷ்டித்தாள் என தேவீபாகவதம் கூறும்!! அவையே

ஸ்ரீ மஹாதுர்கா, ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ,ஸ்ரீ மஹாஸரஸ்வதீ, ஸ்ரீ ஸாவித்ரி, ஸ்ரீ ராதா என்ற தேவீகளாம்!!

ஸ்வயம் ஜ்யோதியாம் பரப்ரஹம்ம ஸ்வரூபிணி ஸ்ரீ புவனேச்வரீயிடமிருந்து பிரிந்த இவர்களே ப்ரக்ருதி எனும் பெயரையுடையவர்கள்!! இவர்களின் பதலக்ஷணத்தை சொல்வது தேவர்களுக்கும் துர்லபம்!! “ப்ர” எனும் பொருள் எழுச்சியையும் “க்ருதி” எனும் பதம் ச்ருஷ்டியையும் குறிக்கும்!! “ப்ர” என்பது ஸத்வத்தையும் “க்ரு” என்பது ரஜோ குணத்தையும் “தி” என்பது தமோ குணத்தையும் இயம்பிக் காட்டும்!! இப்படி த்ரிகுணாத்மமாகிய சக்தியோடு கூடி ச்ருஷ்டிப்பதில்

இவர்களே முதற் சக்திகளாக இருப்பவர்கள்!! ப்ர எனும் வார்த்தை முதல் எனும் பொருளையும் க்ருதி என்பது ச்ருஷ்டியை குறிப்பதால் இவர்களே ச்ருஷ்டிக்கு ஆதியாம்!! இவ்வாறு பஞ்ச ப்ரக்ருதிகளான சக்திகள் பரமாத்மா எனும் ப்ரஹம்மத்தோடு கலந்திருக்கும் சித்சக்தியாம்!!

ஆதலாலே ச்ருஷ்டிகாலத்தில் தக்ஷிணபாகம் புருஷனாகவும்!! வாமபாகம் ஸ்திரீயாகவும் இருக்கின்றன!! புருஷ,ஸ்திரீயென த்விதிய ஸ்வரூபத்தில் காக்ஷீயளித்தாலும் ஸத்யமறிந்த யோகீந்த்ரர்கள் பரமாத்மா ஸ்வரூபமே சக்தி என்றறிந்தவர்களாகி அதனை த்விதியமாக காணாமல் அக்னியில் சூடுபோல் பேதமற்றதுமாய்!!

அழிவில்லாததுமாய்!! ஒன்றாயிருக்கின்ற ப்ரஹம்ம ஸ்வரூபமென உணர்ந்து ஸர்வம் சக்தி ஸ்வரூபமென்பர்!! தானே ஏகப்ரஹம்ம மயமாக விளங்கும் பராசக்தி புவனேச்வரீயே தன்னிலிருந்து புருஷ ஸ்வரூபத்தை தோற்றுவிக்க வேண்டுமென்று சுயேக்ஷையாக பிரிந்து தானே தோன்றினாள்!! அந்த மூல ப்ரக்ருதியின் ஆக்ஞையினாளே ஐவகைப்பட்ட ச்ருஷ்டிகள் உண்டாயின!!

தொடர்ந்து தேவீயின் பஞ்ச சக்தி ஸ்வரூப வைபவங்களை காண்போமாக!!

ஸ்ரீ சிந்தாமணி க்ருஹ ஸுவாஸினி!!
மம ஹ்ருதய நிவாஸினி!!
ஸ்ரீ புவனேச்வரீ!!

ஜய ஜகதம்ப ஸிவே!!
ஜய ஜய காமாக்ஷீ!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.