கோதாவரியை கௌதமி என அழைக்க காரணம் என்ன?

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
kothavari 1 - 2026

கௌதமி என்ற பெயர் எவ்வாறு வந்தது?

கோதாவரி நதியை புராணங்கள் கௌதமி என்ற பெயரால் அழைக்கின்றனர். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.

கௌதம முனிவரின் ஆசிரமம் பஞ்சவடியில் அமைந்திருந்தது முனிவரின் பூஜைக்கு அவரது ஆசிரமத்தை சுற்றிலும் பசுமையான நந்தவனங்கள் இருந்தது.

முனிவரின் பொறுமையை சோதிக்க எண்ணிய பார்வதி தனது தோழி ஜெயா என்பவளை பார்த்து பசு வடிவத்தில் அனுப்பி வைத்தாள் நந்தவனத்தை அடைந்து அங்குள்ள செடிகொடிகளை மேய்த்து அழிக்கத் தொடங்கியது.

பசுவின் செயலால் முனிவரின் தியானம் கலைந்தது கோபம் கொண்ட கௌதமர் ஒரு தடியை எடுத்து பசுவை அடித்தார் அடி தாங்காமல் அங்கேயே கீழே விழுந்து உயிரை விட்டது.

kowthamar - 2026

பசுவைக் கொன்ற பாவம் முனிவரை வருத்தியது. தன் பாவம் தீர முக்கண் முதல்வனை சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். பார்வதி ஈசனிடத்தில் சென்று நான் முனிவரை சோதனை செய்து பார்த்தேன் தாங்கள் அன்புகூர்ந்து அவருக்கு அருள் ஆசி வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டாள்.

அதன்படி கௌதம முனிவருக்கு காட்சியளித்து அருள் புரிந்த ஈசன் தமது ஜடா முடியை திரியம்பகேஸ்வரத்தில் உதறினார் தலையிலிருந்து உதிர்ந்த நீர் அங்கிருந்த அத்தி மரத்தின் வழியாக புண்ணிய நதியாக பெருக ஆரம்பித்தது. கௌதம முனிவரின் பொருட்டு தோன்றியதால் கௌதமி என்றும் பெயர் பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.