அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் நாளை புஷ்பாஞ்சலி!

Published:

achankovil temple - 2026

வெள்ளிக்கிழமை 31-01-2020 தை 17ஆம் நாள் அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.

அச்சன்கோவில் திருத்தலம், பரசுராமர் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டதால் ஆலயத்தின் வருஷாபிஷேகம், ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

achankoil abarana committee - 2026

அதன்படி இந்த வருடம் சிறப்பு வாய்ந்த புஷ்பாஞ்சலி (வருஷாபிஷேகம்) வைபவம், தை மாதம் ரேவதி நட்சத்திரமான 31-01-2020 அன்று நடைபெறுகிறது.

காலை கணபதி ஹோமம், கலச அபிஷேகம், அஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் களபாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6.30 க்கு யானை மேல் ஊர்வலமாக எழுந்தருளச் செய்யப் பட்டு, சுமார் 2 டன் பூக்களால் மாபெரும் புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

achankoil ther1 - 2026

பக்தர்கள் இந்த வைபவத்தில் தவறாது கலந்து கொண்டு ஸ்ரீ தர்மசாஸ்தா அச்சங்கோயில் அரசன் சுவாமி ஐயப்பனின் அருள் பெற, தாங்கள் அழைப்பதாக புஷ்பாஞ்சலிக் கமிட்டியினர் கூறினர். மேலும், இந்த புஷ்பாஞ்சலிக்கு நன்கொடை, பூக்கள், பூஜை பொருட்களைக் கொடுத்து அனுப்பலாம் என்றும் அவர்கள் கூறினர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 26 கி.மீ., தொலைவில் உள்ள அச்சங்கோவிலுக்கு தற்போது தென்காசி, செங்கோட்டையில் இருந்து கேரள அரசுப் பேருந்து மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img