
ஈஸ்வரர் இருந்தால் அவன் ஏன் நம் எதிரில் வரமாட்டான் என்று ஒருவர் கேட்கிறார் அது என்ன அவ்வளவு பயம் அவன் நம் எதிரில் வரட்டுமே என்று கேட்டார்
ஒரு இடத்தில் உபன்யாசத்தில் ஆச்சார்யாள் கூறுகிறார். ஈஸ்வரன் என்று சொன்னால் அவனுடைய சக்தி அபாரமானது அவன் சர்வேஸ்வரன் சர்வ சக்தன் அவனுக்கு முடியாத காரியம் கிடையாது அப்பேர்ப்பட்ட அவன் ஏதாவது ஒரு சமயம் வந்தால் நீ பேசாமல் இருப்பாயா? ஒரு சாதாரண மந்திரி உனக்கு எதிரில் வந்தாலே எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என கேட்கிறாய்
எங்களுக்கு பஸ் வசதி வேண்டும் எங்கள் ஊருக்கு எலக்ட்ரிசிட்டி வேண்டும் இங்கே போர்வெல் கிடையாது ரோடு வேண்டும் அது கிடையாது இது கிடையாது என்று சாதாரண மந்திரி வந்தாலே நீ பிராணனை வாங்குகிறாய்.

அப்பேர்ப்பட்ட ஈஸ்வரன் வந்தால் என்ன பண்ணுவாய் முதலில் அந்த சொர்க்கத்தை இங்கே கொண்டு வந்து விடு இல்லாவிட்டால் உன்னை போக விடமாட்டேன் என்று சொல்லுவாய் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவன் வரவில்லை.
அதோடு ஈஸ்வரனை ஆராதித்தால் நமக்கு அவசியமானதை அவன் பண்ணுவான். எத்தனை மஹான்கள் பகவானை தரிசித்து சாடக்ஷாத்க்ருத பரப்பிரம்மாண: என்று சாஸ்திரத்தில் சொல்வார்கள் பகவத் சாட்சாத்காரம் அடைந்தவர்கள் எவ்வளவு பேர் இனி நமக்கு ஏன் அப்படி கிடைக்கவில்லை என்று சொன்னால் நம்முடைய சாதனை கிரமமே வேறு. அவர்களுடைய சாதனை கிரமமே வேறு.
நம் சாதனைக்கும் அவர் சாதனைக்கும் என்ன வித்தியாசம் அப்படி என்றால்.. முன்னோர்கள் சொன்னார்கள் மகரிஷிகள் என்ன பண்ணினாலும் அதைத்தான் நாம் செய்ய வேண்டும் அவர்களைப் போன்றே நாமும் சந்தோஷம் அடையலாம் அவர்களும் தியானம் பண்ணினார்கள் நாமும் தியான பண்ணுகிறோம் அவர்கள் வெயில் மழை சகித்துக் கொண்டார்கள் நாமும் சகித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அவர்களுக்கு கிடைத்த பலன் நமக்கு கிடைக்க வில்லை.
ஏனென்றால் அவர்கள் எதிலேயும் ஆசை இல்லாமல் பகவானை ஆராதனை செய்தவர்கள் நாம் மனதில் ஆயிரம் ஆசைகளை வைத்துக் கொண்டு இந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள என்று தவசு பண்ணுகிறோம். அவர்கள் மழை வெயில் குளிர் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார்கள் சந்தோஷமாக சிரித்துக் கொண்டார்கள்.

நாமோ கரண்டு போய்விட்டது ஜெனரேட்டர் கிடையாதா நிர்வாகம் சரி இல்லையா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ரொம்ப குளிர்காலம் வெண்ணீர் காய்ச்சுவதற்கு ஹீட்டர் கிடையாது அந்த மாதிரி வழியே நாம் போகிறோம்
அவர்கள் அப்படி இல்லை எல்லாம் இருந்தாலும் எனக்கு எதுவும் தேவை இல்லை என்று அவர்கள் போனார்கள் தியானம் என்றால் என்ன ஒரே வஸ்துவை 24 மணி நேரம் சிந்திப்பது தியானம் பண்ணினார்கள் பகவானை தான் 24 மணி நேரமும் தியானம் செய்தார்கள்.
நாம் என்ன செய்கிறான் 24 மணி பணம் பணம் என்று தியானம் செய்கிறோம் எப்போதும் எப்படி பணத்தை சம்பாதிப்பது, எப்படி சேர்ப்பது, எப்படி பலமடங்கு ஆக்குவது, இந்த தியானம் நமக்கு இருக்கிறது
தியானத்தை அவர்களும் செய்தார்கள் நாமும் செய்கிறோம் ஆனால் அவர்கள் செய்த தியானம் வேறு நாம் செய்யும் தியானம் வேறு அதனால்தான் பலனும் ரொம்ப வித்தியாசம் ஆகிவிட்டது நம்முடைய சாதனை கிரமத்திற்கு அவர்களுடைய சாதனை கிரமத்திற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது
நாம் கொஞ்சமாவது அந்த மார்க்கத்தில் போக வேண்டும் அவர்கள் எந்த மார்க்கத்தில் போனார்களோ அந்த மார்க்கத்தில் நாம் போக வேண்டும் வெறும் ஆசைகளை வைத்துக் கொண்டு இந்த ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக நாம் பகவானை பூஜை செய்யக்கூடாது
என் மனதில் எந்த ஆசையும் உண்டாக்காமல் பண்ணு அப்போது தான் நிஜமான சுகத்தை அடைய முடியும் மனதில் ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது அந்த ஆசைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டே இருக்கிறோம் ஆனால் நாம் முயற்சிகளில் ஒன்று கூட வெற்றி கிடைப்பதில்லை ஆசையை தீர்வும் இல்லை அதனால் மனதில் வருத்தம் தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
யாருக்காவது ஒரு சந்தோஷத்தை உண்டாகி இருக்கிறதா கிடையாது ஏனென்றால் பத்து ரூபாய் ஒரு இருந்த காலத்தில் நூறு ரூபாய் இருந்தால் போதும் என்று நினைக்கிறோம் 100 ரூபாய் கிடைத்த உடனே ஆயிரம் ரூபாய் 1000 ரூபாய் கிடைத்த பின் லட்சம் இப்படி நம்முடைய எண்ணம் உயர்ந்துகொண்டே போகிறது.
அதனால் ஆசைகள் இல்லாமல் பகவானே வேண்டும் என்று நாம் பிரார்த்திப்பது ஒன்றுதான் விசேசமான பிரார்த்தனை அப்பேற்பட்ட ஒரு மார்க்கத்தில் நாம் இருந்தால் மனதில் எந்த ஆசையும் இல்லை எனக்கு வேண்டியது ஈஸ்வர சாக்ஷாத் காரத்தில் ஆசை ஒன்று தான் என்று முடிவுக்கு வந்தோம் என்றால் நாம் பரவசத்தை அடைய முடியும் பகவானுக்கு மட்டும் யார் விஷயத்திலும் ஒரு நேசமோ ஒரு துவேஷமோ கிடையாது

பகவான் சிலருக்கு நல்லது செய்கிறான் சிலருக்கு கெடுதல் செய்கிறான் என்று யாரும் நினைத்துக் கொள்ளாதீர்கள் நாம் செய்த கர்மாவிற்கு தகுந்த மாதிரி பகவான் நமக்கு பலன் தருகிறார்
ஒரு கோர்ட்டில் நீதிபதி குற்றாவாளிகளாக இருக்கும் எல்லோருக்கும் சமமான ஒரு தண்டனை கொடுப்பதில்லை அவனுடைய தப்பிற்கு தகுந்த மாதிரி தண்டனை தருகிறார் என்கிறபோது நாம் ஆட்சேபனை செய்கிறோமா அதே மாதிரிதான் பகவானும் அவனவனுக்கு தகுந்தபடி அவன் தண்டனை கொடுக்கும் போது நாம் ஏன் எதிர்க்கவேண்டும் அவனுக்கு மட்டும் யார் விஷயத்திலும் பிரியமோ துவஷேமோ கிடையாது.
பகவான் பகவத்கீதையில் சொல்லி இருக்கிறார்
மனேத் வேஷ்யோதினப்ரிய: எனக்கு யார் மேலேயும் த்வேஷம் கிடையாது.
ஆகவே நிஷ்சிந்தையுடன் பகவானை தியானம் செய்து பகவத் கிருபைக்கு பாத்திரமாகுங்கள் என்று உபதேசித்து அருளினார்கள் மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள்.