பயத்தையும் ஆபத்தையும் நீக்கும் நரசிம்மர்!

narasimhar
narasimhar

பயத்தை போக்கும் “11” நரசிம்மர்கள்

புதுவை முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் பதினோரு நரசிம்மர்கள் அருட்பாலிக்கின்றனர். மாணவர்களுக்கு கல்வி வரம் அருளும் ஹயக்ரீவர், உலகின் பல இடங்களில் பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறார்.

ஆனால் அவர் பெரும்பாலும் பெருமாள் கோயில்களில் ஒரு சந்நதி கொண்டுதான் அருட்பாலிப்பார். ஆனால் புதுச்சேரி
முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் மூலவராகவும்,
உற்சவராகவும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார்.

இதனால் இந்த கோயிலை லட்சுமி ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோயில் என குறிப்பிடுகிறார்கள்.

முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அரசமரத்தின் அடியில் எளிமையாக தோன்றிய இக்கோயில் இன்று கோபுரங்களுடன் உயர்ந்து ஒரு முக்கிய ஸ்தலமாகியிருக்கிறது. இந்த கோயிலில் மற்றொரு சிறப்பம்சம்,

உலகில் “11” நரசிம்ம மூர்த்திகள்
ஒரே இடத்தில் அருட்பாலிக்கும் தலம் என்பதுதான்.

திருவுக்கும் திருவாகிய செல்வத்திருமால் எழுந்தருளிய அவதாரங்களில் ஏற்றமுடையதாகவும், எளிமையானதாகவும் விளங்குவது நரசிம்ம அவதாரம். மற்றைய அவதாரங்களில், குறிப்பாக ராம, கிருஷ்ண அவதாரங்களைக் காட்டிலும் ஏற்றம் உடையது ஸ்ரீ நரசிம்ம அவதாரம்.

ஏனெனில் தன் பக்தனுக்காக எடுத்த அவதாரம் இது. தன் அடியவன் பல துன்பங்களை அடைந்தாலும், தன் பகைவன் திருந்த மாட்டானா? அவனையும் கடைத்தேற்ற வேண்டுமே! என்ற உயரிய எண்ணத்தோடு காலம் கடத்தினார் ஸ்ரீ நரசிம்மர்.

ஆம். பிரகலாதன் தன் தந்தை இரணியனால் பல வகையில் துன்பப்பட்டாலும், இரணியனை திருத்திடவே பார்த்தார் பகவான். ஆனால் இரணியன் கடைசி வரை திருந்தவே இல்லை.

நாராயணன், நாராயணன் என்கிறாயே? இந்த தூணில் இருக்கிறாரா? என ஆவேசமாக கேட்டு பிரகலாதனை இரணியன் சித்ரவதை செய்தான்.

எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, ஆம். இந்த தூணில் நாராயணன் இருக்கிறார் என பிரகலாதன் பதில் அளித்தான்.

உடனே, தன் பக்தனின் வாக்கினை மெய்யாக்க அங்கிருந்த எல்லா தூண்களிலும் உள்நிறைந்து இருந்தார்

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

ஸ்ரீ மந் நாராயணன். இரணியனின் அரண்மனையில் இருந்த தூண்கள் நிரசிம்ம கர்ப்பம் தரித்தன என்கிறார்
ஸ்ரீ வேதாந்ததேசிகன்.
அத்தகைய நரசிம்மர் அவதரித்த ஸ்ரீ அகோபில க்ஷேத்திரத்தில் நவ நரசிம்மர்களாய் இன்றும் தரிசனம் தருகிறார்.

அந்த நவ நரசிம்மர்களுடன் பானக நரசிம்மர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருடன் ஏகாதச ருத்ரர்களுக்கு 11 விதமாக நரசிம்மர் காட்சி தந்தது போலவே 11 நரசிம்மர்களாய் இந்த கோயிலில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

80 திவ்ய தேசங்களுக்கு மேலாக கால்நடையாக சென்று மங்களசாசனம் செய்த மகான் என்ற பெருமை பெற்றவர் திருமங்கை மன்னன்.

அவரே அகோபிலத்தை சென்றடைய முடியாது. இதனாலேதான் தெய்வமல்லால் செல்லவொண்ணா சிங்கவேள் குன்றமே என பாடினார். இன்றைய சூழலில் கூட நரசிம்ம அவதாரத்தைக் காண பக்தர்கள் அகோபிலம் சென்றால் ஒரே மூச்சாக 9 மூர்த்திகளை சேவித்து விட முடிவதில்லை.

இந்த குறையை போக்கும் வகையில் பக்தர் ஒருவரின் கனவில் அந்த 9 மூர்த்திகளையும் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் பிரதிஷ்டை செய்யுமாறு பகவான் பணித்தாராம். அதன்படி நவ நரசிம்மர்களும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கூடுதலாக ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகில் உள்ள மங்களகிரியில் எழுந்தருளியிருக்கும் பானக நரசிம்மரும் இங்கு அருள்புரிகிறார்.

மேலும் லட்சுமி ஹயக்ரீவர் மூலவராக காட்சியளிக்கும் கருவறையில் ஒருவராக லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கிறார்.

இவ்வாறு 11 நரசிம்மர்கள் பக்தர்களுக்கு அருள்புரியும் ஓர் அற்புத தலமாக இந்த கோயில் விளங்குகிறது. இங்கு வந்து நரசிம்மர்களை ஒரு சேர தரிசித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

ஜூவாலா நரசிம்மர்:
10 கைகளுடன் தரிசனம் தரும் இந்த நரசிம்மர் இரணியனின் உடலைக் கிழிக்கும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்களின் தொல்லைகள் ஆகியவற்றில் இருந்து காத்தருள்கிறார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

அகோபில நரசிம்மர்:
தாயார் மகாலட்சுமியுடன் பிரகலாதனுக்கும், மற்றவர்களுக்கும் தரிசனம் அளித்தார். சுக்கிர தோஷத்தால் ஏற்படும் தோஷங்களை உடனடியாக போக்கி அருள்புரிவார்.

மாலோல நரசிம்மர்:
சங்குசக்கரதாரியாய் அழகிய கோலத்தில் எழுந்தருளி அருட்பாலிக்கிறார். மனபயத்தைப் போக்கி தைரியத்தை அருள்கிறார்.

வராக நரசிம்மர்:
சகல கலைகள், இயல், இசை, நாடகத்துறையில் சிறக்க அருள் புரிவார். நல்ல செழிப்பான இல்லங்களில் வாழும் பாக்கியம் அருள வல்லவர்.

காரஞ்ச நரசிம்மர்:
ஞானம், வைராக்கியம், தீவிர பக்தி ஆகியவற்றை அருள்செய்து யாவரும் வணங்கி போற்றக்கூடிய ஞானிகள், மருத்துவ மேதைகளை உருவாக்க வல்லவர்.

பார்கவ நரசிம்மர்:
இவரை வழிபட்டால் பாவங்கள் தீர்ந்து நன்மை உண்டாகும். வெளிநாடு சென்று செல்வம் சேர அருள்புரிவார்.

யோகானந்த நரசிம்மர்:
பக்த பிரகலாதனுக்கு யோக பாடங்களை கற்றுக்கொடுத்தவர். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்படும் தடைகளை தகர்ப்பார்.

சத்ரவட நரசிம்மர்:
நாட்டின் தலைமை பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரத்தை வழங்க வல்லவர்.

பாவன நரசிம்மர்:
மனம் போனபடி நடந்துகொள்வது, தீச்செயல்களை துணிந்து செய்வது போன்ற தீமைகளை தடுத்தாட்கொள்கிறார்.

பானக நரசிம்மர்:
நாம் அளிக்கும் பானகத்தை பிரசாதமாக ஏற்றுக்கொண்டு நமக்கு மங்கள வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் அளிப்பவர். 11 மேலும் லட்சுமி ஹயக்ரீவர் மூலவராக காட்சியளிக்கும் கருவறையில் ஒருவராக லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கிறார்

பதினோரு நரசிம்மர்களுக்கு டிசம்பர் 8ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் நரசிம்ம ஸஹஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனையாக நடக்கிறது. கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமையில் எம்பெருமான் தனது மூன்றாவது கண்ணை திறந்து பார்ப்பதாக ஐதீகம் உள்ளது. இந்த நன்னாளில் நடைபெறும் இந்நிகழ்வில் பக்தர்கள் கலந்துகொண்டு பல்வேறு நலன்களைப் பெறலாம்.

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

மங்களங்கள் தரும் ஸ்ரீ ந்ருஸிம்ஹ மங்கள
நவரத்ன மாலிகா ஸ்தோத்திரம் :

மங்களம் ஸ்தம்படிம்பாய மங்களம் ம்ருத்யும்ருத்யவே
மங்களம் ரௌத்ரரூபாய நரஸிம்ஹாய மங்களம்

ஹிரண்யகசி’பும் ஹத்வா தைத்யேந்தரம் தேவகண்டகம்
ஜகத்ரக்ஷண துர்யாய ஜகத் பீஜாய மங்களம் … !!!
.
ப்ரஹ்லாதஸ்துதி ஸந்துஷ்ட ப்ரஸன்ன நிஜமூர்த்தயே
வரதா(அ)பய ஹஸ்தாய வரதாய ச மங்களம்

கராக்ரை: வஜ்ரஸம்ஸ்பர்சை’: நகரை: ச’த்ருதாரிணே
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தத்வாய தார்க்ஷ்யவாஹாய மங்களம்
.
நரகண்டீரவாகார வ்யக்தாத்யுக்ர விபூதயே
ம்ருகேந்த்ராய நரேந்த்ராய தைவதேந்த்ராய மங்களம்

கிரீடஹார கேயூர குண்டலா லங்க்ருதாய ச
கோடிஸூர்ய ப்ரகாசா’ய தேவஸிம்ஹாய மங்களம்
.
த்ரியுகாய த்ரிப்ரிஷ்ட்டாய த்ரிகுணாய த்ரிமூர்த்தயே
நரகேஸரி ரூபாய லக்ஷ்மீலோலாய மங்களம்

மத்ஸ்ய கச்சப வாராஹ ராம வாமன மூர்த்தயே
ராம க்ருஷ்ணாத்மனே பௌத்த கல்கி ஸிம்ஹாய மங்களம்
.
ஸர்வபீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்ட்டான மூர்த்தயே
ஸர்வேச்’வராய ஸர்வஸ்மை ஸத்வஸிம்ஹாய மங்களம் … !!!

சக்திவாய்ந்த ஶ்ரீந்ருஸிம்ஹரின்  

ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதசநாம ஸ்தோத்ரம்

பன்னிரண்டு நாமாக்களை பக்தியுடன் ஜபித்தால் ஆபத்துகளிலிருந்து அவன் ரக்ஷிப்பான் :

1ப்ரதமஸ்து :~ மஹோஜ்வாலோ 2. த்விதியஸ்:~ தூக்ரகேஸர்
3 த்ருதிய:~ க்ருஷ்ண பிங்காக்ஷ:
4, சதுர்த்தஸ்து:~ விதாரணா
5 பஞ்சாஸ்ய:~ பஞ்சமம்சைவ 6.ஷஷ்ட: ~ கஶிபுமர்தா
7 ஸப்தமோ:~ தைத்யஹந்தாச 8.அஷ்டமோ:~ தீநவல்லப
9 நவம்:~ ப்ரஹ்லாதவரதோ 10 தஸமோ:~ நந்தஹஸ்தக
11 ஏகாதஶ :~ மஹாரெளத்ரோ 12 த்வாதஶ:~ கருணாநிதி :

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories