FB IMG 1695030333511 - 2026

பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில்..

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகம் ஆலயங்கள் விழாக்கள் விசேஷங்கள்
FB IMG 1695030333511 - 2026
பெண் வடிவில் விநாயகர்

இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். நம்மில் பலர், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது அது பற்றி பார்ப்போம்….

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரை காணலாம்.

பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி என பல பெயர்களில் வணங்கப்படுகிறார்.
இக்கோவில் நாகர்கோவில்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தாணுமாலயன் என்ற இக்கோவிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது. தாணு என்பது சிவபெருமானையும், மால என்பது பெருமாள் விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது.

17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலானது கேரளத்தை சேர்ந்த நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பூதிரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இந்த கோவிலின் மூலவராக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்து ஒரே ரூபமாக தாணுமாலயனாக அருள்பாலிக்கின்றனர். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே ரூபமாக பார்ப்பது அரிதிலும் அரிதானதாகும்.

பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு அற்புத பெண் தெய்வமாக காட்சி தருகிறாள் கணேஷினி.

தாணுமாலயன் கோவிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5.5மீட்டர் உயரமுள்ள நான்கு மிகப்பெரிய இசைத்தூண்கள் இருக்கின்றன. அலங்கார மண்டபம் என்ற பகுதியில் இருக்கும் இந்த இசைத்தூண்களை தட்டினால் சப்தசுவரங்களில் இசை வெளிப்படுவது பிரம்மிப்பின் உச்சம்.

மேலும் இக்கோவிலில் தான் 22அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13அடி உயரமும், 21அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் இருக்கின்றன. இந்த நந்தி சிலை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.