இன்று ரத சப்தமி! என்ன செய்ய வேண்டும்?!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் லைஃப் ஸ்டைல்
bhishma krishna - 2026

இன்று ரதசப்தமி நாள். இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?

இந்த ரத ஸப்தமி நாளில், ஆன்மிக விஷயமாக கடைப்பிடிப்பவர்கள், எருக்கு இலையை தலையில் வைத்து புனித நீராடுவர். அப்போது சொல்ல வேண்டிய சுலோகங்கள் இவை..

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்
யத் யத் கர்ம க்ருதம்பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன் மே ரோகம் ச சோகம் ச மாகரி ஹந்து சப்தமி
நமாமி ஸப்தமீம் தேவிம் ஸர்வ பாப ப்ரனாசினீம்
ஸப்த அர்க்க பத்ர ஸ்நானேன மம பாபம் வ்யபோஹய

ஏழு எருக்கை இலையும், பச்சரிசியும் ஆண்களுக்கு, பெண்களுக்கு இத்துடன் சிறிது மஞ்சள் பொடியும் சேர்த்து தலையில் வைத்து கொண்டு ஸ்நானம் செய்யவும்.

துய்மையான உலர்த்திய வஸ்திரம் உடுத்திக் கொண்டு, நெற்றியில் அவரவர் மரபுப் படி விபூதி குங்குமம் சந்தனம் என இட்டு கொண்டு ஸுரியனுக்கு அர்க்கியம் கொடுக்க வேண்டும்.

ரத ஸப்தமி ஸ்நானாங்க அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லவும்.

ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக திவாகர
க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே
திவாகராய நமஹ இதமர்க்கியம்,
திவாகராய நமஹ இதமர்கியம்;
திவாகராய நமஹ இதமர்க்கியம்.

அநேன ஸப்த பத்ரார்க்க ஸ்னானேன அர்க்கிய ப்ரதானே ச
பகவான் ஸர்வாத்மகஹ ஸ்ரீ ஸுர்ய நாராயாண ப்ரீயதாம்.

அடுத்த நாள்… தை மாதம் சுக்ல பட்ச அஷ்டமி 13-02-2019.–பீஷ்மாஷ்டமி.

ஸ்நானம் செய்து விட்டு நெற்றியில் இட்டுக் கொண்டு தகப்பனார் இருப்பவர் உள்பட எல்லோரும் பீஷ்மருக்கு அர்க்கியம் விட வேண்டும். ஒவ்வொரு சுக்ல பட்ச அஷ்டமியிலும் கொடுக்கலாம். இந்த அஷ்டமி மட்டுமாவது அவசியம் கொடுக்க வேண்டும். நாம் தெரியாமல் செய்த பாபங்கள் அழிந்து போகும்.

வையாக்கிர பாத கோத்ராய ஸாங்க்ருத்ய ப்ரவராய ச
அபுத்ராய ததாம்யர்க்கியம் ஸலிலம் பீஷ்ம வர்மிணே
பீஷ்மாய நமஹ இதமர்க்கியம் (மூன்று முறை கொடுக்கவும்.)

கங்கா புத்ராய பீஷ்மாய சந்தனோராத்மஜாய ச
அபுத்ராய ததாம்யர்க்கியம் ஸலிலம் பீஷ்ம வர்மணே
பீஷ்மாய நமஹ இதமர்க்கியம் (மூன்று முறை கொடுக்கவும்.)

பீஷ்மஹ சாந்தனவோ வீரஹ ஸத்யவாதீ ஜிதேந்திரிய
ஆபி ரத்பி ரவாப்னோது புத்ர பெளத்ரோசிதாம் கிரியாம்
பீஷ்மாய நமஹ இதமர்க்கியம் ( மூன்று முறை கொடுக்கவும்.)

அநேன அர்க்கிய ப்ரதானேன ஸ்ரீ பீஷ்ம ப்ரீயதாம்.

சூர்ய மண்டல ஸ்தோத்ரம்

இது கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப் பட்டது. காரிய வெற்றியைத் தரும் மிகப் புகழ்பெற்ற சுலோகம். உடல் நலத்துக்கும் வலுப் பெறவும் இந்த சுலோகத்தைக் கூறுகின்றார்கள்.

பவிஷ்யோத்தர புராணத்தில் உள்ள சூரிய மண்டல ஸ்தோத்ரம் இது. ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி தினங்களில் மட்டுமல்ல… சாதாரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் இவற்றைத் தொடர்ந்து சொல்லி… அல்லது மனம் ஒருமித்து கேட்டு வர உங்களுக்கு சகல வல்லமையும் கிட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.