விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் மருதூர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர்

Published:

maruthur anjaneyar - 2026

விவசாயம் வளர்ச்சி பெற்று விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அபயம் அளித்த மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்

காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தருகிறார். இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா விமரிசையாக நடைபெறும்.

இன்று மாசி மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையையொட்டி அனுமந்தராய சாமிக்கு அபிஷேக பூஜை முடிந்து விவசாயம் வளர்ச்சி பெற்று விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது.35 வகை காய்கறி அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அபயம் அளித்தார் மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்.

முன்னதாக புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு, முத்துக்கல்லூர் மற்றும் காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுவினரின் பக்தி பஜனை   நடைபெற்றது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இந்த வழிபாட்டில் மேட்டுப்பாளையம்,ஊட்டி,குன்னூர்,கோத்தகிரி, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, புஜங்னூர், தாயனூர், வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு சார்பில் விழா ஏற்பாடுகள்  செய்யப் பட்டிருந்தது.

  • செய்தி: எஸ்விபி சங்கத்தமிழன்

maruthur anjaneyar 35 vegitable alankaram - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img