“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!”

“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!”
 
(பெரியவாள் உரையின் நயத்தை ரசித்த அந்த அதிகாரியின் முகத்தில், வெண்ணெய்- இல்லை-விளக்கெண்ணெய் வழிந்தது)
18403116 1556446661067160 1497124748506696567 n 2 - 2026
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.
கல்வித் துறையில் பெரிய அதிகாரத்திலிருந்த
அன்பர் தரிசனத்துக்கு வந்தார். அடிக்கடி
ஸ்ரீமடத்துக்கு வருபவர்.
 
இந்தத் தடவை இரண்டு ஆங்கிலேய
மாணவர்களை அழைத்துக்கொண்டு
வந்திருந்தார். இங்கிலாந்திலிருந்து
மாணவர்கள் தன்னை நாடி வந்திருக்கிறார்கள்
என்பதால் உள்ளூர ஒரு பெருமிதம்.
 
தலைக்கு மேல் ஒரு சாண் ஏறிப்போயிற்று
அகந்தை.
 
“இவர்கள் லண்டனில் ரிஸர்ச் செய்து
கொண்டிருக்கிறார்கள்.பல சப்ஜெக்ட்களில்
புகுந்து விளையாடுகிறார்கள்…
இங்கிலீஷ்காரர்களே ரொம்ப புத்திசாலிகள்!
இவர்கள் ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப
இண்டலிஜெண்ட்! பி.எச்.டி.வாங்கியிருக்
கிறார்கள்…இங்கிலீஷில்தான் வருஷந்தோறும்
புதுப்புது சொற்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
புதிய புதிய விஞ்ஞானச் சொற்களைக்
கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் அந்த
பாஷை தேங்கிப் போய் பாசி பிடிக்காமல்
ப்யூராகவே இருந்திண்டிருக்கு…”
 
அன்பரின் ஆங்கிலத் தோத்திரம்
முடிவடைவதாக இல்லை.
 
மகாப் பெரியவரின் முன்னிலையில் பேசும்
போது ஓர் அடக்கம் வேண்டும்.ஆங்கிலத்தைப்
புகழ்வதில் தவறு இல்லை; ஆனால் தலைகால்
தெரியாமல் சொற்களைக் குவித்துக்கொண்டு
போகக்கூடாது.
 
அவர் மூச்சு விடுவதற்காக ஒரு விநாடி நேரம்
பேச்சை நிறுத்தியபோது பெரியவாள்
பேசத் தொடங்கினார்கள்.
 
“ஆமாம்…இங்கிலீஷ்காரன் ரொம்ப புத்திசாலி
தான்! நாம் பாலைத் தயிராக மாற்றுகிறோம்.
அது ஸ்வபாவ மாறுதல்.ஆனால் தயிரைப்
பாலாக மாற்றுவதில்லை. மாற்ற முடியாது.
அதனாலே, அக்ஞானிகளான நாம் அந்தமாதிரி
யெல்லாம் மூயற்சி பண்றதில்லே.
 
இங்கிலீஷ்காரன் புத்திசாலியோன்னோ…
“இதோ,நான் தயிரைப் பாலாக்கிக் காட்டறேன்”னான்!
Butter Milk-ன்னு ஒரு வார்த்தையைக் கண்டு
பிடிச்சுட்டான்! பார்த்தியா…எவ்வளவு சுலபமா
Butter-ஐ மில்க் ஆக்கிட்டான்! நாம் என்னவோ
அதை மோர் என்று சொல்கிறோம்.மில்க்ன்னு
சொல்றதில்லே…”
 
அருகில் இருந்தவர்கள் மென்மையாகச்
சிரித்தார்கள்.
 
ஆங்கிலேய மாணவர்கள், ‘பெரியவாள் என்ன
சொன்னார்கள்’என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
 
“மைகாட்! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்;
எ பெட்டர் (Better) ரிசர்ச்! என்று சொல்லி
பெரியவாள் உரையின் நயத்தை ரசித்தார்கள்.
 
அந்த அதிகாரியின் முகத்தில், வெண்ணெய்-
இல்லை-விளக்கெண்ணெய் வழிந்தது
ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories