“பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…”

“பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…”

வீட்டுச் சாமான்கள் திருட்டுப் போய்விட்ட – ஏழை பிராமணர்.

பாங்க் லாக்கர்லே வைக்கச் சொன்ன பெரியவா

தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

உகார் குர்துவில் தங்கியிருந்தபோது,  ஜெமினி கணேசனின் மனைவி தரிசனத்துக்கு வந்திருந்தார். அவர், பெரியவாளிடம்  பேசிக்கொண்டிருந்த போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழைப்பிராமணர் வந்து, தன் பெண்ணுடைய கல்யாணத்துக்குப் பண உதவி கோரினார்.

ஜெமினி கணேசனின் மனைவியிடம், பெரியவா; ‘உன்னிடம் ஏதாவது இருந்தால் கொடேன்’ என்றார்கள்.

உடனே அவர் தன் கையில் அணிந்திருந்த வளையல்களில், ஒரு ஜோடியைக் கழற்றிக் கொடுத்தார், மிகவும் சந்தோஷத்துடன்.

“அவரிடம் இப்போ கொடுக்காதே, கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடி கொடுத்தால் போதும்” என்று பெரியவாள், அங்கே வந்திருந்த உள்ளூர் வங்கி மானேஜரிடம், “இதை பாங்க் லாக்கர்லே வெச்சுக்கோ,அப்புறம் கொடுக்கலாம்” என்றார்கள்.

இரண்டு நாள் கழித்து அதே பிராமணர் வந்து, கோவென்று கதறி அழுதார். வீட்டில் எல்லாச்  சாமான்களும், திருட்டுப் போய்விட்டனவாம்.முதல் நாள் இரவில்.

மீதமிருந்த சொத்து, லாக்கரில் இருந்த வளையல்கள் தான் !

“பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…”

பெரியவா சிரித்துக் கொண்டே, ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு,போ’ என்று கூறி பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

அந்த வளையல்களின் அன்றைய மதிப்பு ரூபாய் இருபதாயிரம் !

இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகளைக் கண்ணால் பார்த்து அனுபவிக்கும் பாக்கியம் அப்போதைய கைங்கர்யபரர்களுக்குக் கிடைத்தது என்றால், அது பூர்வ ஜன்ம புண்ணியப் பலன் !.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories