வாழ்வில் வளம் தரும் மந்திரங்கள்

Published:

Dakshinamurti shiva e1473648030495 - 2026
|| ரிக்வேதம்1:89
– ஆ நோ பத்ரா
: ஸூக்தம் ||
 
ओं आ नो  पत्रा: क्रतवो यन्तु विस्वतो तप्तासो अपरीतास उत्पित:|
तेवा नो यता सतमित् व्रुते असन्नप्रायुवो रक्षितारो तिवेतिवे ||:||
 
ஓம் ஆ நோ  பத்ரா: க்ரதவோ யந்து விஸ்வதோ தப்தாஸோ அபரீதாஸ உத்பித😐
தேவா நோ யதா ஸதமித் வ்ருதே அஸந்நப்ராயுவோ ரக்ஷிதாரோ திவேதிவே |1.1||
தீமை கலவாத, தடையற்றதடைகளை உடைக்கவல்ல, மங்களமான எண்ணங்கள் எல்லாத்திசைகளில் இருந்தும் நம்மிடம் வந்து சேரட்டும். பக்தர்களை கைவிடாத தேவர்கள் எப்போதும் நமக்கு இன்பத்தை வளர்ப்பவர்களாக, அவர்கள் நம்மை காப்பவர்களாக இருக்கட்டும்.
 ||
யஜுர் வேதம் 4:5 – கணபதி மந்த்ரம்
||
(ரிக்வேதம் 2:23:1ம் துதியாக உண்டு)
 
ओं गणानां त्वा गणपतिं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् । 
ज्येष्ठराजं ब्रह्मणाम् ब्रह्मणस्पत आ नः शृण्वन्नूतिभिःसीदसादनम् ॥
महागणाधिपतये नमः ॥ 
ஓம் கணாநாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீநாமுபமஸ்ரவஸ்தமம் .
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆநஃஸ்ர்ண்வந்நூதிபிஃஸீதஸாதநம் மஹாகணாதிபதயே நமஃ . 
தேவர் கூட்டத்திற்கு தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே. உம்மை போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுள் பேரறிஞர். ஒப்பற்ற புகழ் படைத்தவர். முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர். வேதங்களுக்கு நாயகர், எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு எங்களை காப்பதற்கு விரைந்து வந்தருள்வீராக. 
||ரிக்வேதம் 3:62:10 – காயத்ரி மந்த்ரம்||
 ओम् पूर्पुवः स्वः तत्सवितुर्वरेण्यम् पर्को तेवस्य तीमहि तियो यो नः प्रचोतयात् ||
ஓம் பூர்புவஃ ஸ்வஃ தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஃ ப்ரசோதயாத் ||  

 

யார் நம்முடைய புத்திகளை நன்றாக நடத்துவாரோ அந்த சூரியனிலுள்ள பர்க்கனாகிய தேவனுடைய(மகேஸ்வரன்) மகிமையை தியானிப்போமாக.

 ||சுக்கில யஜுர்வேதம் –  3:60||
 
ओं त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ।।
 ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்ம் புஷ்டிவர்தநம்| 
உர்வாருகமிவ பந்தநாந் ம்ர்த்யோர்முக்ஷீய மாம்ர்தாத்||  
முக்கண்ணராகிய சிவபிரானை போற்றி வழிபடுகின்றோம். நறுமணம் கமழ்வதும் புஷ்டியைத் தருவதுமாகிய வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல மரணத்தில் இருந்து விடுபடுவோமாக. சிவபிரானை துதிக்கும் இந்த நிலையில் இருந்து விலகாமல் இருப்போமாக. 
 
||கிருஷ்ண யஜூர்வேதம் – 4:5:3:1||
 
ओम् नम: शम्पवे च मयोपवे च नम: शङ्कराय च मयस्कराय च नम: शिवाय  च शिवतराय च ॥  
ஓம் நம: சம்பவே ச மயோபவே ச நம: சங்கராய ச மயஸ்கராய ச
நம: சிவாய ச சிவதராய ச
உலக இன்பமாகவும் ,மோட்ஷா இன்பமாகவும் இருப்பவரும் ,உலக இன்பத்தையும், மோக்ஷ இன்பத்தையும் தருபவரும்,மங்கல வடிவினரும் ,தம்மை
அடைந்தவர்களைச் சிவமயமாக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
 
சுபமஸ்து
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img